×

வருமான வரித்துறை அதிகாரிகள் எனக்கூறி தெலங்கானா முதல்வரின் உறவினர்கள் கடத்தல்: முன்னாள் பெண் அமைச்சர், கணவர் உள்பட 10 பேர் கைது

திருமலை: வருமான வரித்துறை அதிகாரிகள் எனக்கூறி தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவின் உறவினர்கள் கடத்தப்பட்டனர். தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர்ராவ். இவரது நெருங்கிய உறவினர் பிரவீன்ராவ் (60). இவரது குடும்பத்திற்கு சொந்தமான 50 ஏக்கர் நிலம் ஐதராபாத் அபிட்ஸ் பகுதியில் உள்ளது. இந்த நிலத்தை சிலர் ஆக்கிரமித்ததாக தெரிகிறது.இதில் ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவாக தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த ஆந்திர மாநில தெலுங்கு தேசம் கட்சி முன்னாள் அமைச்சர் அகிலப்பிரியா, அவரது கணவர் பார்கவ்ரெட்டி ஆகியோர் தலையிட்டு அடிக்கடி பஞ்சாயத்து செய்துவந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில் நேற்றுமுன்தினம் அதிகாலை ஐதராபாத்தில் உள்ள பிரவீன் வீட்டிற்கு இரண்டு கார்களில் சென்ற 15 பேர் கொண்ட மர்மகும்பல், தங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் என அறிமுகம் செய்துகொண்டனர். உங்கள் வீட்டில் சோதனை நடத்த வேண்டும் என கூறினர். அதன்படி அவர்களுக்கு பிரவீன் குடும்பத்தினர் சோதனை நடத்த ஒத்துழைப்பு அளித்தனர். இந்நிலையில் திடீரென பிரவீன்ராவ், அவரது சகோதரர்களான நவீன்ராவ், சுனில்ராவ் ஆகியோரிடம் விசாரணை செய்வதுபோல் நடித்து 15 பேரும் வீட்டில் இருந்த பெண்களை தனி அறையில் அடைத்து பூட்டினர். பின்னர், அந்த கும்பல் பிரவீன்ராவ் மற்றும் அவரது 2 சகோதரர்களையும் மிரட்டி 2 கார்களில் ஏற்றி கடத்திச்சென்றது.இதுகுறித்து அவரது குடும்பத்தினர் ஐதராபாத் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து செயல்பட்ட போலீசார், 3 மணி நேரத்தில் புறநகர் பகுதியில் 2 கார்களை மடக்கி பிடித்தனர். அதில் இருந்த 8 பேரை பிடித்த போலீசார், பிரவீன்ராவ் மற்றும் 2 சகோதரர்களை பத்திரமாக மீட்டனர்.  இந்த கும்பலை முன்னாள் அமைச்சர் அகிலப்பிரியா, அவரது கணவர் பார்கவி ரெட்டி அனுப்பி வைத்தது தெரியவந்தது. இதையடுத்து, அகிலப்பிரியா, பார்கவ் ரெட்டியிடம் போலீசார் விசாரித்தனர். அவர்கள் இருவரும் பிரவீன்ராவ் உள்ளிட்டோரை மிரட்டி சொத்துக்களை அபகரிக்க திட்டம் போட்டது தெரிந்தது. இதையடுத்து இவர்கள் இருவர் உள்பட 10 பேரையும் கைது செய்தனர். தப்பி ஓடிய மற்றவர்களை தேடிவருகின்றனர். …

The post வருமான வரித்துறை அதிகாரிகள் எனக்கூறி தெலங்கானா முதல்வரின் உறவினர்கள் கடத்தல்: முன்னாள் பெண் அமைச்சர், கணவர் உள்பட 10 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Telangana ,Income TX ,Thirumalai ,Chief Minister ,Chandrasekara ,Chandrasekarrao ,Chief of State of ,
× RELATED சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாஜக...