தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகார்: 2 மணிக்கு தீர்ப்பு

டெல்லி: பணம் மற்றும் அதிகாரம் படைத்தவர்கள் நீதித்துறையை ஒருபோதும் கட்டுப்படுத்தி இயக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீதான பாலியல் புகார் தொடர்பான விசாரணையில் நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளார. நெருப்புடன் விளையாடுகிறீர்கள் எனவும் நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பாலியல் புகாரில் தலைமை நீதிபதியை சிக்க வைக்க சதி நடப்பதாக கூறப்பட்ட புகாரில் 2 மணிக்கு  தீர்ப்பு வழங்கவுள்ளது என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகார் பற்றி உச்சநீதிமன்ற நீதிபதிகள் இன்று தீர்ப்பு வழங்கவுள்ளனர். நீதிபதிகள் அருண் மிஸ்ரா, ரோஹின்டன் நாரிமன், தீபக் குப்தா அடங்கிய அமர்வு விசாரணை தொடங்கியது. கடந்த 2018-ல் ரஞ்சன் கோகாய் தனக்கு பாலியல் தொல்லை தந்ததாக உச்சநீதிமன்ற முன்னாள் பெண் ஊழியர் புகார் கொடுத்திருந்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Ranjan Gokhai , Chief Justice ,Ranjan Gokhai, Judgment
× RELATED வியாபாரிகள் புகார் இந்திரா காந்தி பிறந்த நாள்