×

ட்வீட் கார்னர்... சச்சினுக்கு ஐசிசி வாழ்த்து!


கிரிக்கெட் விளையாட்டின் ஈடு இணையற்ற சாதனை மன்னன் ‘மாஸ்டர் பிளேஸ்டர்’ சச்சின் டெண்டுல்கர் நேற்று தனது 46வது பிறந்தநாளை உற்சாகமாகக் கொண்டாடினார். பிரபலங்களும், ரசிகர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தனது ட்விட்டர் பக்கத்தில் சச்சினின் உலக கோப்பை ரன் குவிப்பு புள்ளி விவரங்களை வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளது. உலக கோப்பை ஆட்டங்களில் மட்டுமே சச்சின் 2278 ரன் (சதம் 6, அரை சதம் 15, சராசரி 56.95) விளாசி உள்ளது குறிப்பிடத்தக்கது.  ரசிககள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஐசிசி உலக கோப்பை தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் மே 30ம் தேதி தொடங்கி ஜூலை 14ம் தேதி வரை நடைபெற உள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : ICC ,Tendulkar , ICC congratulates, Tendulkar
× RELATED ஐசிசியின் மார்ச் மாதத்திற்கான சிறந்த...