நடிகர் இமான் அண்ணாச்சி வீட்டில் 41 சவரன் நகைகள் கொள்ளை

அண்ணாநகர்: சென்னை அரும்பாக்கத்தில் காமெடி நடிகர் இமான் அண்ணாச்சி வீட்டில் 41 சவரன் நகை கொள்ளை ேபானது.தமிழ் சினிமா மற்றும் ‘சொல்லுங்கண்ணே சொல்லுங்க’ என்ற டிவி நிகழ்ச்சி மூலம் பிரலமானவர் காமெடி நடிகர் இமான் அண்ணாச்சி (49). இவர், அரும்பாக்கம், ராஜிவ்காந்தி தெருவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 2வது மாடியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு மனைவி மற்றும் குழந்தைகள் லீவுக்கு சொந்த ஊருக்கு சென்றுவிட்டனர். இமான் அண்ணாச்சி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.  இந்நிலையில் இமான் அண்ணாச்சி தான் எப்போதும் அணிந்திருக்கும் செயின்கள், மோதிரம் உள்பட 41 சவரன் நகையை கழட்டி, அறையில் உள்ள பீரோவில் வைத்திருந்தார்.

நேற்று முன்தினம் மாலை இவர் நண்பரை பார்க்க சென்றுவிட்டு மீண்டும் வீட்டுக்கு திரும்பினார். பீரோவை திறந்து பார்த்தபோது, அதில் இருந்த 41 சவரன் நகைகள் காணாமல் போனது தெரிய வந்தது. இதுகுறித்து நேற்று அரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் இதுதொடர்பாக இமான் அண்ணாச்சி வீட்டில் வேலை பார்க்கும் இரண்டு பெண்கள் மற்றும் உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories:

>