×

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 3 கோடி மோசடி வழக்கு ஐகோர்ட் முடித்து வைப்பு

சென்னை:  சென்னை தலைமை செயலகத்தில் உள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் துணை செயலாளராகப் பணியாற்றுவதாகவும்  அரசு வேலை வாங்கித் தருவதாகவும் கூறி ரூ.70 லட்சம் மோசடி செய்த திருவண்ணாமலையை சேர்ந்த நாவப்பன் மீது அளித்த புகார் மீது விசாரணை நடத்தக் கோரி சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டியன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
 அவர் தாக்கல் செய்த மனுவில், தன்னை ஐஏஎஸ் அதிகாரி என கூறிக்கொண்ட நாவப்பன், ஏற்கனவே 50 பேரிடம் அரசு வேலை வாங்கித்தருவதாக 3 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளார்.

 இதுபற்றிய செய்தியைப் பார்த்த பின், தலைமைச் செயலாளரிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, மோசடி செய்தவர்கள் மீது முறையான விசாரணை நடத்துமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார்.  இந்த மனு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய குற்றப்பிரிவு போலீஸ் தரப்பில் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்பட்டது. அந்த அறிக்கையில், வேலை வாங்கித் தருவதாக மோசடியில்  சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து  கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கூறப்பட்டிருந்தது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Government , fraud case , state court
× RELATED ஒன்றிய அரசு குறித்து அமெரிக்கா மீண்டும் விமர்சனம்