சென்னை விமான நிலையத்தில் 1.4 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்: 3 பேர் கைது

சென்னை: சென்னை விமான நிலையத்தில் ஓமன், இலங்கை மற்றும் துபாய் நாடுகளில் இருந்து கடத்திவரப்பட்ட 1.4 கிலோ தங்கத்தை அதிகாரிகள் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். ஓமன் தலைநகர் மஸ்கட்டில் இருந்து ஓமன் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று பிற்பகல் 2.30 மணிக்கு சென்னை விமான நிலையத்திற்கு வந்தது. அதில் சென்னையை சேர்ந்த ரியாஸ் அகமது (27) என்பவர் ஓமன் நாட்டிற்கு சுற்றுலா பயணிகள் விசாவில் சென்றுவிட்டு திரும்பி வந்தார்.  இவர் மீது சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை தனி அறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தபோது உள்ளாடைக்குள் தங்க கட்டிகளையும், தங்க நகைகளையும் மறைத்து வைத்திருந்தார். அதன் மொத்த எடை ஒரு கிலோ இருந்தது. இதன் சர்வதேச மதிப்பு 32 லட்சம். எனவே அவரை கைது செய்து தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

இதற்கிடையே பிற்பகல் 3.00 மணியளவில் இலங்கையில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில்  வந்த  புதுக்கோட்டையை சேர்ந்த இக்பால் (42) என்பவரை அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் தனி அறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர். அப்போது ஆசனவாயில் 200 கிராம தங்க கட்டியை மறைத்து எடுத்து வந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு ₹6 லட்சம். எனவே தங்கத்தை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.
இதேபோன்று நேற்று காலை 8.30 மணிக்கு துபாயில் இருந்து எமரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் சென்னை வந்தது. அதில் வந்த பயணிகளில் ஒருவரான சென்னையை சேர்ந்த அப்துல் ரகிம் (40) என்பவர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை சோதனை செய்தபோது பேண்ட் பாக்கெட்டில் 2 தங்க கட்டிகளை மறைத்து வைத்திருந்தார். அதன் மொத்த எடை 200 கிராம், சர்வதேச மதிப்பு ₹6 லட்சம். எனவே தங்கத்தை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.

சென்னை விமான நிலையத்தில் நேற்று காலை முதல் பிற்பகல் வரை நடந்த அதிகாரிகள் சோதனையில் ஓமன், இலங்கை, துபாய் நாடுகளிலிருந்து கடத்தி வரப்பட்ட 44 லட்சம் மதிப்பிலான 1.4 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு 3 பயனிகள் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.  சென்னை கொருக்குப்பேட்டை, ஜெ.ஜெ.நகரை சேர்ந்தவர் அப்சல் (26). தனியார் நிறுவன ஊழியர். இவர் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில், தனது வீட்டின் அருகே நின்றிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த ஆட்டோ, அப்சல் மீது உரசியபடி சென்றது. உடனே ஆட்டோவை வேகமாக தட்டி, சத்தம் போட்டார். ஆட்டோ நின்றது. அதிலிருந்து இறங்கிய ஜெ.ஜெ.நகர் 5வது தெருவை சேர்ந்த ஆட்டோ டிரைவர் வினோத் (26), சல்மான் (22) மற்றும் இப்ராகிம் (20), தீபக் (24) ஆகியோர் வாக்குவாதம் செய்தனர்.

பின்னர், அங்கு கிடந்த கற்கள் மற்றும் கட்டையால் அப்சலை சரமாரியாக தாக்கி விட்டு தப்பினர். அப்சல் படுகாயத்துடன் துடித்தார். அவ்வழியாக வந்த சிலர், அப்சலை மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புகாரின்பேரில் ஆர்.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அதே பகுதியில் பதுங்கியிருந்த வினோத் உள்ளிட்ட 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஆட்டோவை பறிமுதல் செய்தனர். பின்னர், 4 பேரையும் ஜார்ஜ்டவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Chennai Airport , Chennai airport, smuggling, gold and three arrested
× RELATED மணல் கடத்திய மாட்டு வண்டி பறிமுதல்