×

இந்தியர்கள் எங்கிருந்தாலும் பாதுகாப்பதே எனது கடமை: ஜார்க்கண்டில் பிரதமர் மோடி பேச்சு

ஜார்க்கண்ட் மாநிலத்தில் வரும் 29ம் தேதி முதல் மே 19ம் தேதி வரை 4 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், ஜார்க்கண்டின் லோகர்தகா பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: நான் மதம் மற்றும் சாதியின்  அடிப்படையில் மக்கள் மீது வேறுபாடு காட்டுவதில்லை. ஈராக்கில், 46 கேரள   நர்ஸ்களை பணயக் கைதிகளாக பிடித்து வைத்திருந்தபோது அவர்களை மீட்க நடவடிக்கை  எடுத்தேன்.

கொல்கத்தாவை சேர்ந்த ஜூடித் டி சவுசா கடத்தப்பட்டபோதும், அவரை  தாயகம் கொண்டு வர நடவடிக்கை எடுத்துள்ளேன். இந்த காவலாளி நாட்டின்  மகள்களின் பாதுகாப்பு குறித்தே எப்போதும் கவலைப்பட்டு வருகிறேன். இந்தியர்கள் எங்கிருந்தாலும் அவர்களை பாதுகாப்பது நாட்டின் கடமையாகும்.  இவ்வாறு மோடி பேசினார். ‘ஸ்டிக்கர் மம்தா’: இக்கூட்டத்தை தொடர்ந்து மேற்குவங்க மாநிலம் ரனகாத்தில் நேற்று மாலை நடைபெற்ற பிரசாரத்தில் மோடி பேசுகையில், ‘‘மத்திய அரசின் திட்டங்களுக்கு தடையாக இருக்கும் ஸ்பீட் பிரேக்கர் தீதி (மம்தா), இப்போது ஸ்டிக்கர் தீதியாக மாறியுள்ளார்.  

பொதுமக்களுக்காக செயல்படுத்தப்படும் இலவச மின்விநியோகம் மற்றும் ரேஷன் பொருட்கள் உள்ளிட்ட மத்திய அரசின் திட்டங்களை தனது அரசின் திட்டங்கள் என பறைசாற்றி வருகிறார். இது தவிர ரவுடியிசம், பணத்தை பலவந்தமாக பறித்தல், சிண்டிகேட் அமைத்து செயல்படுதல் போன்ற செயல்கள் மூலம் மேற்குவங்க மக்களுக்கு பல்வேறு இன்னல்களை அவர் கொடுத்து வருகிறார்’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : anywhere ,Modi ,Indians ,Jharkhand , Indians, my duty, my duty, Jharkhand, PM Modi, talk
× RELATED உலகமே இந்தியாவை நம்பிக்கையுடன்...