×

பொய் சொல்றவங்கள உள்ள விடாதீங்க.... பிரியங்கா காந்தி பேச்சு

உத்தரப்பிரதேசத்தின் பதேப்பூர் தொகுதியில் ஐந்தாவது கட்டமாக வருகிற மே 6ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து கட்சியின் பொது செயலாளர் பிரியங்கா காந்தி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரியங்கா காந்தி பேசியதாவது:

அரசியலை மாற்றுங்கள். உங்கள் பகுதிக்காக, உங்களது தேவைகளுக்காக இல்லை. ஆனால் உங்கள் எதிர்கால சந்ததியினர் மற்றும் நாட்டை பாதுகாப்பதற்காகஇதனை செய்யுங்கள். நாடு ஆபத்தில் இருக்கிறது. பிரிவினை அரசியல் மற்றும் எதிர்மறை சக்திகளை  அகற்றுங்கள். உங்களை பற்றியும், உங்களது துயரங்கள் பற்றி பேசுபவர்கள், அதனை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கை எடுப்பவர்களை வரவேற்று ஆதரியுங்கள்.
 
ஜனநாயகத்தில் மக்கள் சக்தியை விட மிகப்பெரியது எதுவும் கிடையாது. அனைவரும் வாக்களிப்பதற்கு உரிமை பெற்றுள்ளீர்கள். அதுதான் உங்களது மிகப்பெரிய வலிமையும் கூட. உங்கள் வாக்குதான் உங்கள் உரிமை மற்றும் உங்களது ஆயுதம். நீங்கள் இந்த ஆயுதத்தை சாதுர்யமாக பயன்படுத்துங்கள். பொய் கூறுபவர்களையும், உங்களுக்காக பணியாற்றாத நபர்களையும் அனுமதிக்காதீர்கள். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

அவர் பிரதமர் அல்ல ‘பிரதம பிரசார மந்திரி’

மோடி பிரதமர் கிடையாது, பிரதம பிரசார மந்திரி என காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார். பிரியங்கா தனது டிவிட்டர் பதிவில், “நமது பிரதம பிரசார மந்திரியை வரவேற்கும் வகையில் சாலைகளை சுத்தம் செய்வதற்காக லாரிகளில் தண்ணீர் கொண்டு வந்து வீணாக்கப்படுகிறது. ஒட்டுமொத்த ம.பி.யின் பந்தல்கண்ட்டில் வசிக்கும் ஆண்கள், பெண்கள், பள்ளி செல்லும் சிறுவர்கள், பயிர்கள், பறவைகள் மற்றும் விலங்குகள் கடுமையான வறட்சியை எதிர்கொண்டுள்ள நிலையில் இதுபோன்று தண்ணீர் வீணடிக்கப்படுகின்றது. அவர் பாதுகாவலரா அல்லது டெல்லியில் இருந்து வரும் பேரரசரா?” என பதிவிட்டுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Priyanka Gandhi , False Sayings, Do not Let, Priyanka Gandhi, Talk
× RELATED மின்னணு வாக்கு இயந்திரங்களில்...