சட்டமன்ற இடை தேர்தல் முதல்வர் எடப்பாடி மே 1 முதல் பிரசாரம்

சென்னை: சட்டப்பேரவை இடை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி மே 1ம் தேதி முதல் பிரசாரம் செய்கிறார். சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் மே 19ம் தேதி நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மே 1ம் தேதி முதல் மே 14ம் தேதி வரை அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்கிறார். அதன்படி சூலூர் தொகுதியில் 1, 14ம் தேதிகளிலும்,  அரவக்குறிச்சி தொகுதியில் 5, 13ம் தேதிகளிலும்,  திருப்பரங்குன்றம் தொகுதியில் 6, 11ம் தேதிகளிலும்,  ஓட்டப்பிடாரம் தொகுதியில் 7, 12ம் தேதிகளிலும் பிரசாரம் செய்கிறார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories:

>