×

இரட்டை இலை விவகாரம்: சசிகலா சீராய்வு மனு தாக்கல்

புதுடெல்லி, ஏப்.25: ஓபிஎஸ்-இபிஎஸ் தரப்புக்கு இரட்டை இலை சின்னம், அதிமுக ஒதுக்கீடு செய்ததை ரத்து செய்ய வேண்டும் என சசிகலா,  உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி சார்ந்த அணிக்கு அதிகப்படியான பெரும்பான்மை உள்ளதை அடிப்படையாக கொண்டு இரட்டை இலை சின்னம் மற்றும் அதிமுக கட்சி ஆகியவற்றை தேர்தல் ஆணையம் கடந்த 2017ம் ஆண்டு ஒதுக்கீடு செய்தது. டெல்லி உயர்நீதிமன்றத்தில், தேர்தல் ஆணைய உத்தரவுக்கு எதிராக டிடிவி தினகரன் வழக்கு தொடர்ந்தார்.  இரட்டை இலை சின்னம் மற்றும் அதிமுக கட்சி ஆகியவற்றை ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆகியோருக்கு ஒதுக்கீடு செய்தது செல்லும் என்று  இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது.

ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்பில் நடந்து முடிந்த மக்களவை தேர்தல், 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஆகியவற்றில் இரட்டை இலை சின்னம் மற்றும் அதிமுக கட்சி சார்பாக அவர்களது வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்தநிலையில் நேற்று சசிகலா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜாசெந்தூர்பாண்டியன் ஒரு மேல்முறையீடு மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில் இரட்டை இலை சின்னம் மற்றும் அதிமுக கட்சி ஆகியவற்றை ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு ஒதுக்கீடு செய்த விவகாரத்தில் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்பட்டுள்ளது. அதே உத்தரவையே டெல்லி உயர்நீதிமன்றமும் தீர்ப்பாக வழங்கியுள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Sasikala , Double leaf, Sasikala, review petition
× RELATED தாராபுரம் அலங்கியத்தில் பறக்கும் படை சோதனையில் ரூ.92 ஆயிரம் சிக்கியது