×

ஜூன் மாதம் அதிமுக செயற்குழு பொதுக்குழு கூட்டம் நடக்கிறது

சென்னை: அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வருகிற ஜூன் மாதம் நடக்கிறது. ஆண்டுக்கு  ஒருமுறை பொதுக்குழுவும், இரண்டு முறை செயற்குழுவும் கூட்ட வேண்டும்  என்பது அதிமுகவின் சட்ட விதிகளில் ஒன்று. கடைசியாக 2017ம் ஆண்டு செப்டம்பர் 12ம் தேதி அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் சசிகலா பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் தேர்வு செய்யப்பட்டனர். அதன்பிறகு கடந்த ஒன்றரை ஆண்டாக அதிமுக பொதுக்குழு கூட்டம்  நடைபெறவில்லை.
இந்நிலையில், அதிமுக பொதுக்குழு கூட்டத்தை தள்ளிவைக்க அனுமதிக்க வேண்டும் என்று இந்திய  தேர்தல் ஆணையத்திற்கு அதிமுக தரப்பில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஒரு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

அந்த கடிதத்தில் கூறி இருப்பதாவது: கஜா புயலால் தமிழகத்தின் பல பகுதிகள் முற்றிலும் சேதமடைந்துள்ளது. நிவாரண பணிகளில்  சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஈடுபட்டுள்ளனர். எனவே 2018ம் ஆண்டு பொதுக்குழுவை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  2019ம் ஆண்டு ஜூன் 30ம் தேதிக்குள் அதிமுக கட்சியின் பொதுக்குழு  கூட்டம் நடத்தி முடிக்கப்படும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. இதற்கு இந்திய தேர்தல் ஆணையமும் அனுமதி அளித்துள்ளதால், அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் மக்களவை மற்றும் இடைத்தேர்தல் முடிவுகள் வெளியானதும், வருகிற ஜூன் மாதம் நடைபெறும் என்று கூறப்படுகிறது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : executive ,AIADMK ,meeting , June, AIADMK, Executive General Council Meeting,
× RELATED பாஜ நிர்வாகி மண்டை உடைப்பு; அதிமுக பிரமுகர் கைது