×

பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை: கன்னியாகுமரியில் அதிர்ச்சி!

கன்னியாகுமரி: மணிமுத்தாறு கோதையாறு மின் உற்பத்தி நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் நடைக்காவூரில் கருங்கல் பகுதியை சேர்ந்தவர் அஜின் ராஜ்(28). மணிமுத்தாறு ஒன்பதாவது பட்டாலியனில் பணிபுரிந்து வந்த இவர், இன்று காலை கோதையாறு மின் உற்பத்தி நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது திடீரென அவர் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு கொண்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. கடந்த 21 நாட்களாக விடுப்பில் இருந்த அஜின் ராஜ், இன்று தான் மீண்டும் பணியில் சேர்ந்துள்ளார்.

இந்த நிலையில் அவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம், பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள கோதையாறு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், அஜின்குமார் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், அவரது குடும்பத்தினர் வேறு ஒரு பெண்ணை நிச்சயம் செய்ததாகவும் அந்தப் பெண்ணைத் தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என அழுத்தம் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அவர் மன அழுத்தத்தில் இருந்ததாகவும் அதன் காரணமாகவே அவர் தற்கொலை செய்துகொண்டதாகவும் சொல்லப்படுகிறது. அடுத்தடுத்து நிகழ்ந்துவரும் போலீசார் தற்கொலை சம்பவங்கள், காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : suicide ,Kanyakumari , Kanyakumari, police, Gun, Suicide, Kothaiyaru
× RELATED தெலங்கானாவில் மேலும் 2 விவசாயிகள் தற்கொலை