×

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையில் சர்வதேச நிபுணர் குழுவின் முன்பு விளக்கம் தர தயார்: திருப்பதியில் பிரதாப் ரெட்டி பேட்டி

திருமலை: மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையில், சர்வதேச நிபுணர் குழு முன் விளக்கம் தர தயார் என்று திருப்பதியில் அப்போலோ மருத்துவமனை நிர்வாக இயக்குனர் பிரதாப் ரெட்டி கூறினார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அப்போலோ மருத்துவமனை நிர்வாக இயக்குனர்  பிரதாப் ரெட்டி நேற்று சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்த பிரசாதம் வழங்கினர். பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:  உலக மக்கள்  அனைவரும்  ஆரோக்கியத்துடன் வாழவேண்டும். நாளுக்கு நாள் வியாதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 15 வயதில் கூட மாரடைப்பு, கேன்சர் போன்றவை ஏற்படுகிறது. இதுகுறித்து போதிய விழிப்புணர்வு ஏற்படுத்திய காரணத்தால் எனது கிராமத்தில் கடந்த 2 ஆண்டுகளில் புற்றுநோய் முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளது.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு உலகத்தரமான சிகி ச்சை அளிக்கப்பட்டது. டாக்டர்கள் அவருடன்  இருந்தபோது ஜெயலலிதாவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. ஜெயலலிதா மரணம் அடைந்தபோது, நடந்தவற்றை 17 குறிப்புகளாக கொடுத்து   நீதிமன்றம் மூலம் எங்களிடம் விளக்கம் கேட்டனர்.  அந்த குறிப்புகள் அனைத்தும் தமிழில் உள்ளன. ஆனால் எங்கள் டாக்டர்கள் ஆங்கிலத்தில் அதற்கான விளக்கத்தை கூறுவதில் சில சிக்கல்கள் உள்ளன. எனவே சர்வதேச நிபுணர் குழு முன், உள்ளதை உள்ளபடி தெரிவிக்க நாங்கள் தயாராக உள்ளோம். எனது 40 ஆண்டு கால மருத்துவ சேவையில் சிறந்த மருத்துவம் அவருக்கு வழங்கப்பட்டது.  இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Priyanka Reddy ,interrogation ,Tirupati ,death ,Jayalalithaa , Jayalalitha, death, Tirupathi, Pratap Reddy
× RELATED வாக்கு எண்ணும் மையத்தில் ஆய்வு...