×

ஜெட் ஏர்வேஸ் கதி என்னாகும்? மத்திய அரசு தொடர்ந்து மவுனம்: பைலட்கள், ஊழியர்கள் வெளியேறும் அபாயம்

புதுடெல்லி: ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் திவாலாவதை தடுக்க மத்திய அரசு எந்த முயற்சியும் செய்ததாக தெரியவில்லை. பைலட்கள்,ஊழியர்கள் வெளியேறுவதால் மறுமுதலீடு செய்வதிலும் சிக்கல் நீடிக்கிறது. ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் கடன் பாக்கியில் மூழ்கி திவாலாகும் அபாயத்துக்கு சென்று விட்டது. மத்திய அரசு காப்பாற்றினால் ஒழிய வேறு வழியில்லை. ஏற்னவே, தொழிலதிபர் மல்லையா வைத்த 9 ஆயிரம் கோடி ரூபாய் வங்கி கடன் பாக்கியால் திவாலாகி விட்டது. இந்த நிலையில், கிங்பிஷர் கதி தான் ஜெட் நிறுவனத்துக்கும் ஏற்படும் என்று அச்சம் உள்ளது. மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியுடன் ஜெட் நிர்வாகம் பேசியது. ஊழியர்கள் சம்பளம் தரக்கூட முடியாத நிலை உள்ளதால், குறிப்பிட்ட கால இடைவெளிக்கு உட்பட்டு கடன் தந்து உதவும்படி கேட்டுக்ெகாண்டது. மேலும், வேறு நிர்வாகம் ஏற்று நடத்தவும் சம்மதித்தது.

ஆனால், இரண்டுக்கும் சாத்தியம் இருப்பதாக தெரியவில்லை. காரணம், ஜெட் கம்பெனியில் இருந்து பைலட்கள், ஊழியர்கள் பலரும் வெளியேறிய வண்ணம் உள்ளனர்.  யாரும் வெளியேற வேண்டாம்; கண்டிப்பாக மத்திய  அமைச்சர் ஜெட்லி உதவுவார் என்று நிர்வாகம் கூறினாலும், சமீபத்தில் தொடர்ந்து அதிக அளவில் பைலட்கள் வெளியேறி வருவது தெரியவந்துள்ளது. பைலட்கள் வெளியேறி விட்டால், கணிசமான அதிகாரிகள் ஊழியர்கள் விலகி விட்டால் கம்பெனியை மீண்டும் புனரமைப்பு செய்வது கடினம். அதனால் யாரும் வெளியேற வேண்டாம் என்று கேட்டு கொண்டுள்ளது நிர்வாகம். ஆனால், பைலட்கள் சங்கம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ஜெட் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது; இருந்தாலும், வாழ்வாதாரம் பயம் காரணமாக பல பைலட்கள் விலகி வருகின்றனர். இதுவரை ஜெட் கம்பெனியில் இருந்து 410 பைலட்கள் வெளியேறி விட்டனர். மீதம் உள்ள 1527 பைலட்களில் பலரும், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் நேர்காணலில் பங்கேற்று விட்டு, வேலை நியமன ஆர்டருக்காக காத்திருக்கின்றனர்.

எங்களை பொறுத்தவரை, நாங்களும் மற்ற விமான நிறுனங்களுடன் பேசி வருகிறோம். குறிப்பிட்ட காலத்துக்காவது லீசில் ஜெட் கம்பெனியை ஏற்று நடத்தினால்,  அதற்குள் அரசு உதவியுடன் புதிய நிர்வாகத்தின் கையில் ஒப்படைக்கலாம். ஜெட் கம்பெனியை திவால் ஆக விடக்கூடாது என்று கேட்டு வருகிறோம்’ என்று சங்க நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   ஜெட் விஷயத்தில் மத்திய அரசு தொடர்ந்து மவுனம் சாதித்து வருகிறது. குறிப்பிடத்தக்க அளவில் யாரும் வாய்திறக்கவில்லை. பல ஆயிரம் பேர் வேலை பறிபோகும் அபாயம் ஏற்பட்டு, திவால் ஆகி விடும் என்ற நிலைக்கு தள்ளப்படுமா  என்ற அச்சம் அதிகரித்து வருகிறது.

அடுத்த மாதம் விடிவு வரும்?
மத்திய அரசு இதுவரை பெரிதாக எந்த பதிலும் சொல்லவில்லை. ஆனால், தேர்தல் முடிவுக்கு பின் தான் எந்த முடியும் எடுக்க முடியும் என்று கைவிரித்து விட்டது.  மே மாதத்தில்  ஜெட் கதிக்கு ஒரு வழி பிறக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜெட் கடன் பாக்கி வைத்துள்ள ஸ்டேட் பாங்க், விமான கம்பெனியின் கடன் பாக்கிக்கு தீர்வு காண முயற்சித்து வருகிறது. இப்போது நல்ல நிலையில் இயங்கும் இந்திய நிறுவனங்களுடன் பேசி வருகிறது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Jet Airways ,government ,exit pilots , Jet Airways, the federal government
× RELATED ஒன்றிய அரசு குறித்து அமெரிக்கா மீண்டும் விமர்சனம்