சவுதியில் தீவிரவாத செயல்களில் ஈடுபட்ட 37 பேருக்கு தூக்கு தண்டனை

ரியாத்: சவுதி அரேபியாவில் தீவிரவாத செயல்களில் ஈடுபட்ட 37 பேர் நேற்று தூக்கிலிட்டு கொல்லப்பட்டனர்.  ஐக்கிய அரபு குடியரசை சேர்ந்த சவுதி அரேபியா நாட்டின் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தீவிரவாத அமைப்புகளை உருவாக்கியதுடன் பல்வேறு தீவிரவாத அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டதால் சவுதி அரேபியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 37 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டிருந்தனர். இந்த  நிலையில் அவர்கள் அனைவருக்கும் நேற்று தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. இஸ்லாமியர்களின் புனிதநகரமான மெக்கா, மெதினா நகரங்களுக்கு அருகேயுள்ள ரியாத்தில் நேற்று குற்றவாளிகள் 37 பேரும் தூக்கிலிடப்பட்டனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED வெளிமாநில சுற்றுலா செல்லும் முதியவர்கள்