கொலம்பியா நாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20ஆக உயர்வு

கொலம்பியா : கொலம்பியா நாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. தென் மேற்கு பகுதியில் உள்ள கவ்கா என்ற இடத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் பான் அமெரிக்கன் நெடுஞ்சாலை அமைந்திருக்கும் மலைப் பகுதியில் நேற்று முன்தினம் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 8 வீடுகள் சரிந்து விழுந்தன.

இந்த விபத்தில் சிக்கி 20க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்ததாக மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர். மேலும் 15க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாகவும் அவர்கள் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் மார்ச், ஏப்ரல் மாதங்களில், இம்மாநிலத்தில் மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி சுமார் 100 பேர் பலியாகி வருகின்றனர் என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories:

>