வாக்கு எண்ணிக்கை மையத்தில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராக்கள் மழையின் காரணமாக செயல்படவில்லை: ஆட்சியர்

சூலூர்: வாக்கு எண்ணிக்கை மையத்தில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராக்கள், மழையின் காரணமாக வேலை செய்யவில்லை, சிசிடிவி கேமரா ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் ராசாமணி தெரிவித்தார். மேலும் சூலூர் சட்டமன்ற தொகுதிக்கு 9 பறக்கும் படை குழுக்கள் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளது எனவும் கூறினார். கோவை மக்களவை தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு 3 அடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது, எனவும் வேட்பாளர்கள், பிரதிநிதிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் எனவும் தெரிவித்தார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED பொன்னமராவதியில் குற்றசெயல்களை தடுக்க...