×

குலை தள்ளும் நேரத்தில் கொடுமை : சூறாவளிக்கு 2 ஆயிரம் வாழை நாசம்

சிவகாசி: சிவகாசி அருகே, குலை தள்ளும் நேரத்தில், சூறாவளி காற்றிற்கு, 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்து நாசமடைந்ததால், விவசாயிகள் வேதனையில் உள்ளனர். சிவகாசி பகுதியில் கடந்த சில நாட்களாக காற்றுடன் மழை பெய்து வருகிறது. ஒரு சில பகுதிகளில் கனமழையும், சில பகுதிகளில் லேசான மழையும் பெய்து வருகிறது. குறிப்பாக சிவகாசி அருகே வடபட்டி, ஈஞ்சார், வெள்ளையாபுரம் உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களில் சூறாவளி காற்றோடு பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், அந்த பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் குலையோடு சாய்ந்தன. நன்கு குலை தள்ளிய நிலையில் இருந்த வாழை மரங்கள் காற்றுக்கு சாய்ந்து வீணாகியதால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். வடபட்டியில் உள்ள ரணியன் என்பவரின் தோட்டத்தில் 6 ஏக்கரில் வாழை பயிரிட்டிருந்தார்.

இதில், ஒன்றரை ஏக்கரில் இருந்த 2 ஆயிரம் வாழை மரங்கள் காற்றுக்கு சாய்ந்து நாசமடைந்தன. மேலும், இதேபகுதியைச் சேர்ந்த மாலா என்பவரின் தோட்டத்தில் ஒரு ஏக்கரில் இருந்த வாழை மரங்கள் முற்றிலும் சாய்ந்தன. சேதமடைந்த வாழை மரங்களை வருவாய்த்துறையினர் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நாசமான வாழை மரங்களுக்கு உரிய நிவாரணம் அரசு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘கடன் வாங்கி வாழை பயிரிட்டோம். குலை தள்ளும் நேரத்தில் சூறாவளி காற்றுக்கு வாழை மரங்கள் சாய்ந்து விட்டன. இதனால், பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : bullies , Hurricane, banana trees, Sivakasi
× RELATED பொங்கல் விளையாட்டு போட்டி பணகுடியில்...