×

பிரிட்டன் இளவரசர் லூயிஸ் தனது முதல் பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார்

லண்டன்: பிரிட்டன் இளவரசர் லூயிஸ் தனது முதல் பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். பிரிட்டன் இளவரசர் சார்லஸ் – அமரர் டயானா தம்பதியினரின் மூத்த மகன் இளவரசர் வில்லியம் ஆவார். இவரது மனைவி கேட் மிடில்டன். இவர்களுக்கு ஏற்கனவே ஒரு ஆண் குழந்தையும், பெண் குழந்தையும் உள்ளனர்.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் மூன்றாவதாக இவர்களுக்கு ஆண்குழந்தை ஒன்று கடந்த ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி பிறந்தது.இதைத் தொடர்ந்து, அந்தக் குழந்தைக்கு பிரின்ஸ் லூயிஸ் ஆர்தர் சார்லஸ் என்று வில்லியம் - கேட் மிடில்டன் தம்பதியினர் பெயர் சூட்டினர். மேலும், குழந்தை ஹிஸ் ராயல் ஹைனஸ் பிரின்ஸ் லூயிஸ் ஆப் கேம்பிரிட்ஜ் என்ற அழைக்கப்பட வேண்டும் என தெரிவித்தனர்.

இந்நிலையில் இங்கிலாந்து அரசு 2ம் எலிசபெத்தின் பேரனும் பிரிட்டன் இளவரசர் வில்லியம் - கேட் மிடில்டன் தம்பதியின் 3வது குழந்தையான லூயிஸ் இன்று தனது முதல் பிறந்த நாளை கொண்டாடுகிறது. இதையொட்டி அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் பிரபுக்கள் இளவரசின் வீட்டிற்கு சென்று வாழ்த்துக்களையும் ஆசிகளையும் வழங்கி வருகின்றனர். பிரிட்டன் அரசர் பட்டதற்கு காத்திருப்போர் வரிசையின் 5வது ஆக இருக்கும் லூயிஸின் அழகிய புகைப்படங்கள் வலைத் தளங்களில் கவனம் பெற்று வருகிறது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Louis ,birthday , Britain, Prince, Louis, William, Kate Middleton, birthday
× RELATED கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா பள்ளி...