×

திருவண்ணாமலையில் சேதமடைந்த தங்கத் தேர் சீரமைப்பு பணி தொடங்கியது

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் தங்கத் தேர், 2 ஆண்டாக நிறுத்தியிருந்ததால் பழுதாகி இருந்தது. பக்தர் ஒருவர் அளித்த ₹3.50 லட்சம் நன்கொடையால், தங்கத் தேர் சீரமைக்கப்பட்டு  பிப்ரவரி 21ம் தேதி வெள்ளோட்டம் விடப்பட்டது. நேற்று முன்தினம் பக்தர்கள், தங்கத்தேர் இழுத்து சென்றபோது, கோயில் மூன்றாம் பிரகாரத்தில் திடீரென தேரின் மேலிருந்த கலசம் பீடத்துடன் உடைந்து விழுந்தது. இந்நிலையில், சேதமடைந்த தங்கத் தேர் சீரமைப்பு பணி நேற்று தொடங்கியது.

அதையொட்டி, கோயில் இணை ஆணையர் ஞானசேகர், அறநிலையத்துறை நகை சரிபார்ப்பு அலுவலர் ஜான்சிராணி முன்னிலையில், அறநிலையத்துறை பொறியாளர்கள் மற்றும் ஸ்தபதிகள் ஆகியோர் விசாரித்து, சீரமைப்பு  பணியை மேற்கொண்டனர்.
இதில், தங்கத்தேரின் பீடம் முறையாக தேர் நிலையுடன் பொருந்தியிருக்கவில்லை. எனவே, கேபிள் வயர் பட்டதும் தேர் பீடம் உடைந்து விழுந்தது தெரிந்தது. பீடம் சீரமைப்பு செய்தபின், அதன் உறுதித்தன்மை குறித்து சான்று  பெறப்பட்ட பிறகே மீண்டும் தங்கத் தேரில் பொருத்தப்படும். இதன்பிறகே, தேர் பவனிக்கு வரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Tiruvanamalai , Damaged , Thiruvannamalai, Gold adjustment, started
× RELATED திருவண்ணாமலையில் ஹிஜாப் அணிந்து...