×

பாஜ வேட்பாளர்னா ஒரு கணக்கு, மத்தவங்களுக்குன்னா ஆமணக்கா? இது என்னங்க நியாயம்?: மாயாவதி கேள்வி

சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்த போபால் தொகுதி பா.ஜ வேட்பாளர் பிரக்யா தாகூரின் வேட்பு மனுவை தேர்தல் ஆணையம் நிராகரிக்காதது ஏன் என பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கேள்வி எழுப்பியுள்ளார். மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் பா.ஜ சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பெண் துறவி பிரக்யா தாகூர் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தொடர்ந்து தெரிவித்து வருகிறார். ‘மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கு விசாரணையில்  தன்னை கொடுமைப்படுத்திய மகாராஷ்டிரா மாநில தீவிரவாத தடுப்பு பிரிவு தலைவர் ஹேமந்த் கர்காரே, நான் விடுத்த சாபத்தால் தான் தீவிரவாதிகளின் குண்டுகளுக்கு பலியானார்’ என அவர் கூறியது சர்ச்சையை  ஏற்படுத்தியது. இதற்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.

இந்நிலையில், மாயாவதி டிவிட்டரில் வெளியிட்டுள்ள தகவலில் கூறியிருப்பதாவது:மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு குற்றவாளியும், போபால் தொகுதி பா.ஜ வேட்பாளருமான பெண் துறவி பிரக்யா தாகூர், ‘‘தர்மயுத்தம் நடத்துவதாக குறிப்பிட்டுள்ளார். இதுதான் பா.ஜ மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பின்  உண்மையான முகம். அவரது வேட்பு மனுவை நிராகரிக்காமல், அவரிடம் தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் மட்டும் அனுப்பியுள்ளது. தேர்தல் ஆணையத்தால் பாரபட்சமின்றி நடந்து கொள்ள முடியவில்லை  என்றால், இது ஜனநாயகத்துக்கு பாதிப்பு. இவ்வாறு மாயாவதி கூறியுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : BJP ,candidate ,Mayawati , BJP candidate,justification,Mayawati, question
× RELATED மாயாவதி கட்சி எம்பி திடீர் நீக்கம்