×

பிலிப்பைன்சில் பயங்கர நிலநடுக்கம்

மணிலா: பிலிப்பைன்சின் லுசான் தீவில் நேற்று மாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் மக்கள் அலறியடித்து சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். நிலநடுக்கத்தினால் அதிகம் பாதிக்கப்படும் பகுதியில் பிலிப்பைன்ஸ் உள்ளது. ‘நெருப்பு வளையம்’ எனப்படும் மிக ஆபத்தான பகுதியில் இந்த நாடு அமைந்திருப்பதால், அடிக்கடி நிலநடுக்கத்தினால் பாதிக்கப்படுகிறது.

இந்நாட்டில் உள்ள லுசான் தீவில் மாலை 5.11 மணிக்கு கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் இது 6.3 ஆக பதிவானது. இதனால் கட்டிடங்கள், வீடுகள் குலுங்கின. அதில் இருந்த மக்கள் அலறியடித்து சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். பூமியில் 40 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : earthquake ,Philippines , Filipine, terrific, earthquake
× RELATED உத்தரகாண்டில் லேசான நிலநடுக்கம்