×

மத்திய பிலிப்பைன்ஸ் நாட்டை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது : ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவு

மணிலா: புவியியல் அமைப்பின்படி நெருப்பு வளையம் என்றழைக்கப்படும் பகுதியில் அமைந்துள்ள மத்திய பிலிப்பைன்ஸ் நாட்டை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 அலகாக பதிவாகியிருந்ததாக அமெரிக்கா புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மணிலா நகரில் இருந்து வடமேற்கில் 60 கிமீ தொலைவில், பூமிக்கடியில் சுமார் 40 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் அந்நாட்டு நேரப்படி காலை சரியாக 9.11 மணி அளவில் நிகழ்ந்ததாக பிலிப்பைன் இன்ஸ்டிடியூட் ஆஃப் செஸ்மொலாஜி அமைப்பு கூறியுள்ளது.மேலும் நிலநடுக்கத்தின் அளவு முதலில் 5.7 அலகாக பதிவான நிலையில், பின்னர் 6.4 ஆக நிர்ணயிக்கப்பட்டது. இதனிடையே நிலநடுக்கத்தால் லுஸான் தீவில் பல கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. பீதியடைந்த மக்கள் வீடுகளைவிட்டு வெளியேறி சாலைகள் போன்ற திறந்தவெளிகளில் தஞ்சம் அடைந்தனர்.

மேலும் இந்த நிலநடுக்கம் பிலிப்பைன்ஸ் நாட்டின் Zambales,  Bulacan, Batangas, Bataan மற்றும் Pampanga ஆகிய மாகாணங்களிலும் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்ததில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். நிலநடுக்கங்கள் அதிகம் ஏற்படும் பசிபிக் நெருப்பு வளைய பகுதியில் பிலிப்பைன்ஸ் உள்ளது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : earthquake ,Philippines , Philippines, earthquake, Manila, Luzon, geography
× RELATED உத்தரகாண்டில் லேசான நிலநடுக்கம்