உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மீது பாலியல் குற்றச்சாட்டு: அருண்ஜேட்லி கண்டனம்

டெல்லி: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மீது கூறப்பட்ட பாலியல் குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்ட விவகாரத்தில் மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி ரஞ்சன் கோகோய்க்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள அருண்ஜெட்லி, இடதுசாரி மற்றும் தீவிர இடதுசாரி ஆதரவு நிலை கொண்ட, ஜனநாயக நிறுவனங்களுக்கு இடையூறு விளைவிப்பவர்களும், பார் கவுன்சிலில் ஒரு பிரிவினரும் இணைந்து நீதித்துறை மீது முன்னெப்போதும் இல்லாத தாக்குதலை முன்னெடுத்திருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மீது கூறப்பட்ட பாலியல் குற்றச்சாட்டு, நீதித்துறையின் மீதான தாக்குதல் என மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி கூறியுள்ளார். பாலியல் புகார் கூறியவர், அந்த பிரச்சனையை பூதாகரமாக்கும் நோக்கத்தில், ஊடகங்களுக்கும் பிற நீதிபதிகளுக்கும் புகார் நகல்களை அனுப்பியுள்ளதாகவும் அருண்ஜெட்லி குறிப்பிட்டுள்ளார். தலைமை நீதிபதி மற்றும் நீதித்துறைக்கு நம்பகத்தன்மையும் மதிப்பும் அடிப்படையானவை என்றும், நீதித்துறை மீதான நல்லெண்ணம் சிதைந்தால் நீதித்துறையும் சிதைந்துவிடும் என அருண்ஜெட்லி எச்சரித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Ranjan Kokai ,Supreme Court ,Arun Jaitley , Supreme Court Chief Justice Ranjan Gogoi, sexual assault, Arun Jaitley, denounced
× RELATED அயோத்தி வழக்கில் நாளை தீர்ப்பு வழங்க உள்ளது உச்சநீதிமன்றம்