×

இலங்கை தலைநகர் கொழும்புவில் வைக்கப்பட்ட வெடிகுண்டுகளை ஏற்றிச்சென்ற வேன் ஓட்டுநர் கைது

கொழும்பு: இலங்கை கொழும்புவில் வைக்கப்பட்ட வெடிகுண்டுகளை ஏற்றிச்சென்ற வேன் ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். கொழும்புவில் உள்ள தேவாலயங்கள், ஓட்டல்களில் வைக்க வெடிகுண்டுகளை கொண்டு சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.

இலங்கையில் தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல் : 290 பேர் பலி

உலகம் முழுவதும் ஈஸ்டர் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. இலங்கையில் கிறிஸ்தவர்கள் நேற்று பல்வேறு தேவாலயங்களில் திரண்டு சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தனர். நேற்று காலை 8.45 மணியளவில் கொழும்புவின் கோச்சிகடே பகுதியில் உள்ள செயின்ட் அந்தோணி புனித தேவாலயத்தில் முதல் குண்டு வெடித்துச் சிதறியது. அதே நேரம், புறநகரான நெகோம்போ பகுதியில் உள்ள செயின்ட் செபாஸ்டியன் தேவாலயம், தமிழர்கள் அதிகம் வசிக்கும் மட்டக்களப்பில் உள்ள ஜியான் தேவாலயங்களிலும் சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்துச் சிதறின.

இதுதவிர கொழும்பில் உள்ள பிரபலமான மூன்று 5 நட்சத்திர ஓட்டல்களிலும் வெடிகுண்டுகள் வெடித்து சிதறின. இலங்கையில் நிகழ்த்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பில் பலியானோர் எண்ணிக்கை 290 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 500க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு இதுவரை எந்த ஒரு அமைப்பும் பொறுப்பேற்க முன்வராவிட்டாலும் இந்த சம்பவம் தொடர்பாக 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெடிகுண்டுகளை ஏற்றிச்சென்ற வேன் ஓட்டுநர் கைது

இந்நிலையில், கொழும்பில் வைக்கப்பட்ட வெடிகுண்டுகளை ஏற்றிச்சென்ற வேன் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் கொழும்புவில் புறநகரில் பானுதுரா என்ற பகுதியில் கடந்த 3 மாதங்களாக தங்கி வெடிகுண்டு தாக்குதலுக்கு திட்டமிட்டதும் தற்போது தெரியவந்துள்ளது. இந்த வேன் ஓட்டுநர் வாகனம் முழுவதும் வெடிகுண்டுகளை நிரப்பி குறிப்பாக நட்சத்திர ஓட்டல்களில் தாக்குதல் நடத்த சென்றிருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

எனினும் வேன் ஓட்டுனரின் பெயர் உள்ளிட்ட விவரங்களை இதுவரை இலங்கை பாதுகாப்பு துறையினர் வெளியிடவில்லை. அவரை ரகசிய இடத்தில் வைத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், வெடிகுண்டு வைத்த தீவிரவாதிகள் கொழும்பின் புறநகரில் பானுதுரா என்ற பகுதியில், வீட்டில் தங்கி இருந்தது தெரிய வந்துள்ளது. இதனிடையே கொழும்பு விமான நிலையத்துக்கு செல்லும் வழியில் 6 அடி நீள பைப் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது. வெடிக்கும் முன்பே வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதால் பெரும்சேதம் தவிர்க்கப்பட்டதாக போலீஸ் தகவல் அளித்துள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Van ,Colombo ,Sri Lanka , Blast, attack, Sri Lanka, bombs, van, driving, arrest
× RELATED கச்சத்தீவை இந்தியாவுக்கு வழங்குவது...