கடந்த 5 ஆண்டுகளில் குண்டு வெடிப்பு நடந்ததை பிரதமர் மோடி மறந்து விட்டாரா? : ப.சிதம்பரம் கேள்வி

டெல்லி : பிரதமர் மோடிக்கு ஞாபக மறதியா அல்லது வேண்டும் என்றே பொய் சொல்கிறாரா என ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் குஜராத் மாநிலம் அம்ரேலி தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட மோடி, தீவிரவாதத்தை காஷ்மீரின் இரண்டரை மாவட்டங்களுக்குள் மட்டும் இருக்கும் வகையில் எனது அரசு கட்டுப்படுத்தியுள்ளது என கூறினார். விமான அபிநந்தனை திருப்பி ஒப்படைக்காமல் இருந்திருந்தால், பாகிஸ்தான் நிலைமை என்ன ஆகியிருக்கும் தெரியுமா என்றும் இந்தியா அணுகுண்டு வைத்திருப்பது என்ன தீபாவளிக்கு வெடி வெடிப்பதற்கா என கூறியிருந்தார். மேலும் கடந்த 5 ஆண்டுகளில் நாட்டில் வேறு எங்கும் குண்டு வெடிக்கவில்லை என்றும் நாட்டில் குண்டு வெடிக்காமல் இருக்க வேண்டுமென்றால் பாஜக ஆட்சி தொடர வேண்டும் என்றும் மோடி பேசினார்.

இதனிடையே இலங்கையில் இன்று நிகழ்ந்த குண்டுவெடிப்பு போல் இந்தியாவில் குண்டு வெடிக்காமல் இருக்க வேண்டும் என்றால் பாஜக ஆட்சி தொடர வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியம் சுவாமி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சி தீவிரவாதிகளின் நட்பு கட்சி என்றும், பாஜக ஆட்சி தொடர்ந்தால் மட்டுமே இந்தியாவில் தீவிரவாதம் இருக்காது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கருத்து தெரிவித்து ப.சிதம்பரம், தனது 5 ஆண்டுகால ஆட்சியில் எங்கும் குண்டுவெடிப்பு நடக்கவில்லை என கூறும் மோடி 2014ல் ஜம்மு காஷ்மீரின் மொஹ்ரா, 2015ல் தண்டேவாடா, 2016ல் பாலமு, அவுரங்காபாத் மற்றும் பீகார், 2017ல் சுக்மா, 2018ல் அபோபல்லி, சத்தீஸ்கர் மற்றும் 2019ல் தண்டேவாடாவிலும் குண்டு வெடிப்பு நடந்தததை பட்டியலிட்டு மோடிக்கு ஞாபக மறதியா என கேள்வி எழுப்பியுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Modi ,P. Chidambaram , Blast,PM Modi,P. Chidambaram,BJP
× RELATED ஆப்கானில் குண்டு வெடித்து 65 பேர் பலி