4 தொகுதிக்கான இடைத்தேர்தலில் போட்டியிட அதிமுகவில் விருப்ப மனு விநியோகம்

சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகளுக்கான இடைத்ேதர்தல் மே 19ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று  தொடங்குகிறது. 29ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் நடைபெறுகிறது. 30ம் தேதி மனுக்கள் பரிசீலனையும், மே 2ம் தேதி மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள். வாக்கு எண்ணிக்கை மே 23ம் தேதி நடைபெறும் என்று தேர்தல்  ஆணையம் அறிவித்துள்ளது. இத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு விட்டனர்.இந்த நிலையில் அதிமுக சார்பில் விருப்ப மனுக்கள் 21ம் தேதி வினியோகிக்கப்படும் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் அறிவித்தனர். அதன்படி, நேற்று காலை 10 மணிக்கு விருப்பமனு விநியோகம் தொடங்கியது. ஓட்டப்பிடாரம் தொகுதிக்கு முன்னாள் எம்எல்ஏ மோகன் விருப்ப மனு  தாக்கல் செய்தார்.

திருப்பரங்குன்றம் தொகுதிக்கு அத்தொகுதியில் எம்எல்ஏவாக இருந்து மறைந்த ஏ.கே.போஸின் மனைவி பாக்கியலட்சுமி, மகன்கள் சிவசுப்பிரமணியம், சங்கர் மற்றும் அதிமுக அமைப்பு செயலாளர்  முத்துராமலிங்கம் உள்பட ஏராளமானோர் போட்டி போட்டு விருப்பமனுக்களை அளித்தனர். இதே போல அரவக்குறிச்சி, சூலூருக்கும் நிறைய பேர் விருப்ப மனுக்களை அளித்தனர்.மாலை 5 மணி வரை விருப்ப மனுக்கள் வாங்கப்பட்டன. தொடர்ந்து இரவில் விருப்பமனு கொடுத்தவர்களை அழைத்து ஓ.பி.எஸ், இபிஎஸ் நேர்காணலை நடத்தினர்.இந்நிலையில் இன்று, அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கட்சி தலைமை அலுவலகத்தில் மாலை 4 மணிக்கு  நடைபெற உள்ளது. இதில் 4 தொகுதி இடைத்தேர்தல் பணிகள்  தொடர்பாக விவாதிக்கப்படுகிறது. 4 தொகுதிக்கான அதிமுக வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்படுகிறார்கள்,பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED பிரதமரிடம் திமுக மனு