×

மார்க்சிஸ்ட் வேட்பாளர் புகார் தபால் ஓட்டுக்களுக்கு பாதுகாப்பு இல்லை

மதுரை: மதுரை மக்களவைத் தொகுதியில் வாக்குச்சாவடி பணியில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், கல்லூரி பேராசிரியர்கள், போலீசார் தங்களது ஓட்டுகளை தபால் ஓட்டுகளாக போட்டு வருகின்றனர். இப்படி பதிவாகும் தபால் ஓட்டுகள் கலெக்டர் அலுவலகத்தில் கணக்கு பிரிவு அலுவலகத்தில் சேகரித்து வைக்கப்பட்டுள்ளது. இந்த அறைக்கு  ஒரு  துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார். வாக்கு எண்ணிக்கை நடைபெறும் முதல் நாள் வரை (மே 22) தபால் ஓட்டுக்களை அனுப்பலாம்.

 இந்நிலையில், நேற்று முன்தினம் மதுரை வாக்கு எண்ணிக்கை மையத்தில் பெண் தாசில்தார் ஒருவர் அனுமதி இன்றி நுழைந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனைத்தொடர்ந்து தபால் ஓட்டுகள் தொடர்பாக பார்வையிட மார்க்சிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசன், தலைமை ஏஜென்ட் கணேசன் ஆகியோர் கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று வந்தனர். தபால் ஓட்டு உள்ள அறையை பார்வையிட்டு அதிர்ச்சி அடைந்தனர். அங்கு எந்த அதிகாரியும் இல்லை. ஓரு போலீஸ் காரர் மட்டுமே இருந்தார். இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசன் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘தபால் ஓட்டுகளைப் பாதுகாக்கும் அறை கண்காணிப்புக் கேமரா (சிசிடிவி) இல்லாமல் உள்ளது. உடனே சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும். தபால் ஓட்டு உள்ள மையத்தை கண்காணிக்க வேட்பாளர்களின் ஏஜென்டுகளுக்கு அனுமதி கொடுக்க வேண்டும்’’ என்றார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : candidate ,CPI (M) , Complaint , Marxist ,,security,postal voting
× RELATED வடசென்னை தொகுதிக்கு உட்பட்ட...