×

வாக்குபதிவின்போது திட்டமிட்டு வன்முறை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பின் முத்தரசன் பேட்டி

சென்னை:  தேர்தலில் பல இடங்களில் திட்டமிட்டு வன்முறை சம்பவங்கள் அரங்கேறி உள்ளது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறினார்.மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் நேற்று காலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் சந்தித்து பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி சொல்லவந்தேன். குறிப்பாக மார்ச் 20ம் தேதி கலைஞர் பிறந்த ஊரான திருவாரூரில் தொடங்கி ஏப்ரல் 16ம் தேதி வரை இடைவிடாமல் 28 நாட்கள் மிகக்கடுமையாக பிரசாரம் செய்தது எங்களுடைய அணிக்கு மிகப்பெரிய பலம் ஆகும். அதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வாழ்த்தும் நன்றியும் தெரிவித்து விட்டு வந்தோம்.

மேலும் நடந்து முடிந்துள்ள இந்த தேர்தலில் பல இடங்களில் ஜனநாயகத்துக்கு விரோதமான முறையில் பல இடங்களில் திட்டமிட்டு வன்முறை காட்சிகள் அரங்கேறி உள்ளது. குறிப்பாக சிதம்பரம் தொகுதியில் தலித் மக்கள் வாக்களிக்க முடியாமல் தடுக்கப்பட்டுள்ளனர்.அதேப்போன்று தர்மபுரி தொகுதியில் கள்ள வாக்குகள் பதிவாகி இருக்கிறது. மதுரையில் சீல் வைக்கப்பட்ட வாக்குப்பெட்டிகள் இருந்த அறையில்  ஆவணங்களை தாசில்தார் எடுத்திருக்கும் தகவல் மிகப்பெரிய பேரதிர்ச்சியளிக்கிறது.
மற்ற தொகுதியில் மக்கள் மத்திய மாநில அரசுக்கு எதிராக வாக்களித்தோர்களோ அதைப்போன்று அந்த 4 தொகுதிகளிலும் மக்கள் வாக்களிப்பார்கள். இலங்கையில் தொடர்ச்சியாக இனப்படுகொலை நடந்து கொண்டிருப்பது உலக அளவில் கவலை அளிக்கிறது. சிங்கள அரசு இன்னும் திருந்தவில்லை என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்து இருக்கிறது. அதனால் அந்த அரசுக்கு எதிராக போராட வேண்டிய அவசியத்தை உணர்த்துகிறது. இந்த சம்பவத்தில் உயிரிழந்த மக்களுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முத்தரசன் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Voting ,MK Stalin ,Muthrasan ,DMK , Plagiarized, Voting,Muthrasan,DMK ,MK Stalin
× RELATED கலைஞர் பிறந்த நாளை முன்னிட்டு...