×

வலைதளங்களை பயன்படுத்தி சமூகங்களை இழிவுபடுத்துவதை தடுக்க வேண்டும்: டிடிவி.தினகரன் கண்டனம்

சென்னை: வலைதளங்களை பயன்படுத்தி சமூகங்களை இழிவுபடுத்து கண்டிக்கதக்கது என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: புதுக்கோட்டை பொன்னமராவதி பகுதியில் பரவிய மிக மோசமான வாட்ஸ் அப் ஆடியோ அப்பகுதியில் தேவையில்லாத பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதற்கு காரணமான விஷமி மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். சமூகங்கள் இடையே மோதலை ஏற்படுத்திட துடிப்பவர்கள் யாராக இருந்தாலும் அதனை அனுமதிக்கக்கூடாது.

காவல்துறை சரியாக செயல்பட்டிருந்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தெருவில் இறங்கி போராட வேண்டிய நிலையே வந்திருக்காது. எனவே, கருத்து சுதந்திரம் என்ற பெயரில் குறிப்பிட்ட சமூகங்களையோ, தனி நபர்களையோ குறிவைத்து சமூக வலைதளங்களில் இழிவு பிரச்சாரம் செய்யப்படுவதை முற்றிலுமாக தடுப்பதற்கு காவல்துறை உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.ஒவ்வொரு காவல் நிலைய அளவிலும் அதற்கான சிறப்பு கண்காணிப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். அதிலும் சாதி, மதத்தின் அடிப்படையில் பரப்பப்படும் அவதூறுகளை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்.




பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : demolition , Communities , websites, Humiliated, DTV
× RELATED NCERT பாடப்புத்தகங்களில், பாபர் மசூதி...