×

அரியலூர், புதுக்கோட்டை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்: இபிஎஸ், ஒபிஎஸ் அறிக்கை

சென்னை: “அரியலூர், புதுக்கோட்டையில் நடைபெற்ற சம்பவத்தில் ெதாடர்புடையவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று இ.பி.எஸ், ஒபிஎஸ் அறிவித்துள்ளனர்.அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி ஆகியோர் வெளியிட்ட அறிக்கை:அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம், பொன்பரப்பி கிராமத்தில் இரு சமூகத்தினரிடையே 18ம் தேதி ஏற்பட்ட பிரச்சனையிலும்; புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி வட்டத்தில் சமூக வலைதளம் வாயிலாக, ஒரு சமூகத்தைப் பற்றி தவறான செய்தி பரப்பப்பட்டதன் காரணமாக, இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட பிரச்சனையிலும், மாவட்ட நிர்வாகமும், காவல் துறையும் உடனடியாகத் தலையிட்டு அங்கு சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்பட்டது.  நிலைமை தொடர்ந்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் விதமாக ஏற்பட்ட இந்த இரு சம்பவங்களும் வேதனைக்குரிய ஒன்றாகும். இவ்விரு மாவட்டங்களிலும், மாவட்ட ஆட்சி தலைவரின் தலைமையின் கீழ் சம்பந்தப்பட்ட சமூகங்களைச் சார்ந்த தலைவர்களை அரசு அதிகாரிகள் தொடர்பு கொண்டு, மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையும் எடுத்து வரும் நடவடிக்கைகள் அவ்வப்போது தெரிய வருகிறது. அமைதி காக்க அதிகாரிகள் எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
மேலும், இச்சம்பவங்களுக்கு காரணமான அனைவர் மீதும் சட்டப்படி கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதில் அதிமுக உறுதியாக இருக்கிறது என்பதை இத்தருணத்தில் தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.





பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Aryalur ,Pudukottai ,OPS , Ariyalur, Pudukottai ,incident,legal proceedings, EPS, OPS ,
× RELATED ஒரு நாள் ஹெச்.எம் ஆன மாணவி