×

பாக் ஜலசந்தி, மன்னார் வளைகுடா கடல் பகுதியில் தீவிர கண்காணிப்பு

ராமேஸ்வரம்: இலங்கையில் நேற்று நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து பாக் ஜலசந்தி, மன்னார் வளைகுடா கடல் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. இலங்கையில் கொழும்பு நகர் மற்றும் மட்டக்களப்பு பகுதியில் கிறிஸ்தவ வழிபாட்டு தலங்கள், நட்சத்திர விடுதிகளில் நேற்று தொடர்ந்து சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் வெடித்ததில் 200க்கும் மேற்பட்டவர்கள் பலியாகினர். சர்வதேச அளவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள வெடிகுண்டு சம்பவத்தை தொடர்ந்து இலங்கை, இந்திய கடல் பகுதியிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
இலங்கை முழுவதும் பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள நிலையில், தமிழர்கள் வாழும் பகுதியில் உள்ள இறைவழிபாட்டு தலங்களுக்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

இலங்கை கடற்படை தளபதி பியஸ் டிசில்வா உத்தரவை தொடர்ந்து இலங்கை கடல் பகுதியில் கடற்படை கப்பல்கள் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருவதுடன் சர்வதேச கடல் பகுதியிலும் கண்காணிப்ைப தீவிரப்படுத்தி உள்ளது. இதுபோல், மத்திய அரசின் உத்தரவை தொடர்ந்து பாக் ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதியிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

இந்திய கடற்படை, இந்திய கடலோர காவல்படையினர் ரோந்து கப்பல்களில் 24 மணிநேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ராமேஸ்வரம், தனுஷ்கோடி கடல் பகுதியில் கடற்படையினரும், கடலோர காவல் படையினரும் ரோந்து கப்பல்கள் மற்றும் ஹோவர்கிராப்ட் கப்பல்களில் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய, மாநில புலனாய்வு துறையினரின் விசாரணையும் தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Palk Strait ,Gulf of Mannar , Pak Strait, Gulf of Mannar, Sea, Area, Extreme, Surveillance
× RELATED தமிழகத்தில் 15ஆம் தேதி முதல் மீன்பிடி தடைக்காலம் அமல்!