நல்லசாமி பேட்டி இடைத்தேர்தலில் கள் இயக்கம் போட்டியிடும்

நாமக்கல்: கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி நாமக்கல்லில் நேற்று அளித்த பேட்டி:

விவசாய பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில், கமிஷன் பரிந்துரையை அமல்படுத்துவது, காவிரி நீரை விகிதாச்சாரப்படி தினந்தோறும் பங்கிட்டுக் கொள்வது, கள்ளுக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடையை நீக்குவது, நிர்வாக செலவு 25 சதவீதத்திற்கும் கீழாக இருப்பது உள்ளிட்ட கொள்கைகளை வலியுறுத்தி,  திருப்பரங்குன்றம், சூலூர், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் ஆகிய சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவது என தமிழ்நாடு கள் இயக்கம் முடிவெடுத்துள்ளது. 4 சட்டமன்ற தொகுதிக்கும், தமிழ்நாடு கள் இயக்கம் சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட உள்ளனர்.  இதற்காக வேட்பாளர் தேர்வு நடந்து வருகிறது. விரைவில் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள். இவ்வாறு நல்லசாமி கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED நடந்து முடிந்த இடைத்தேர்தலில் வெற்றி...