×

வெள்ளிங்கிரி மலையில் மேலும் ஒரு பக்தர் சாவு

கோவை:  கோவை பூண்டி வெள்ளிங்கிரி மலை கடல் மட்டத்தில் இருந்து சுமார் 5 ஆயிரம் அடி உயரத்தில் உள்ளது. இங்கு ஏழாவது மலையில் உள்ள சுயம்பு லிங்கத்தை தரிசிக்க கடந்த பிப்ரவரி மாதம் முதல் பக்தர்கள் மலையேற அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில், கடந்த ஒரு வாரத்தில் 3.75 லட்சம் பேர் மலையேறியுள்ளனர்.

சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, கடந்த 3 நாட்களாக மேற்குதொடர்ச்சி மலை பகுதியில் பெய்து வரும் மழையினால், வெள்ளிங்கிரி மலையின் 6 மற்றும் 7வது மலையில் பனிமூட்டம் அதிகளவில் காணப்படுகிறது. இந்நிலையில், பாண்டிச்சேரியை சேர்ந்த அருள்தாஸ்(50) என்பவர் நேற்று முன்தினம் மலையேற்றத்தில் ஈடுபட்டார். 5வது மலையில் இருந்து 6வது மலைக்கு செல்லும் போது மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். கடந்த 3 மாதத்தில் மட்டும் வெள்ளிங்கிரி மலையேற்றத்தில் ஈடுபட்ட 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : devotees ,hill ,Vellingangi , Vellankiri Mountain, devotee, death
× RELATED சித்ரா பவுர்ணமியையொட்டி வெள்ளியங்கிரி மலையில் குவியும் பக்தர்கள்..!!