×

வீரம் நிறைந்த வயநாடு: வெல்லெஸ்லியை ஓட விட்ட பூமி

கேரளாவின் வயநாடு மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள அடர்ந்த காடுகள் நிறைந்த பகுதி. இந்த மக்களவை தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுவதால், வயநாடு இப்போதும் நாடு முழுவதும் பிரபலமாகி விட்டது. ஆனால், இந்த வயநாடு பழம் பெருமையும் பேசுகிறது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக நியமிக்கப்பட்டவர் ரிச்சர்டு வெல்லெஸ்லி. இவரது சகோதரர் ஆர்த்தர் வெல்லெஸ்லி. மலபார், மைசூர், தெற்கு கனரா பகுதியில் உள்ள பிரிட்டிஷ் படைகளின் கமாண்டராக இருந்தார்.

அப்போது, கோட்டயம்-மலபார் நாட்டின் மன்னராக இருந்தவர் பழசி ராஜா. இவர் ஆங்கில குடியேற்றத்தை எதிர்த்து போராடினார். வயநாட்டின் மிளகு, மஞ்சள், ஏலக்காய் உள்ளிட்ட இதர வாசனைப் பொருட்கள் உயர்ந்த தரத்துடன் இருந்ததால், ஆங்கிலேயர்களின் கிழக்கு இந்திய கம்பெனி வயநாடு பகுதியில் தனி ஆர்வம் காட்டியது. இப்பகுதியில் கொரில்லா தாக்குதலை நடத்தியும் பழசி ராஜாவை, வெல்லெஸ்லி தலைமையிலான படையால் பிடிக்க முடியவில்லை. காரணம், அடர்ந்த வனப்பகுதியாக வயநாடு இருந்தது, இது ஆங்கிலேயே படைகளுக்கு மிகவும் சிக்கலாக இருந்தது. இவரால் கடைசி வரை பழசி ராஜாவை பிடிக்க முடியவில்லை.

1805ம் ஆண்டு வெல்லெஸ்லியும், அவரது சகோதரரும் இங்கிலாந்து திரும்ப அழைக்கப்பட்டனர். 1814ம் ஆண்டு ஆர்த்தர் வெல்லெஸ்லிக்கு வெலிங்டன் பிரபு பட்டம் கிடைத்தது. பின்னர்,, பிரான்சு பேரரசர் நெப்போலியனை எதிர்க்க,  வெல்லெஸ்லி அனுப்பப்பட்டார். கடந்த 1815ம் ஆண்டு இவர் நெப்போலியன் படையை வீழ்த்தியதால், இவரது புகழ் உச்சத்துக்கு சென்றது. இதனால், இவர் இங்கிலாந்து அரசியலில் நுழைந்தார். கடந்த 1828ம் ஆண்டு ஆர்த்தர் வெல்லெஸ்லியை இங்கிலாந்தின் பிரதமராக பதவியேற்று ஆட்சி அமைக்குப்படி இங்கிலாந்து அரசர் நான்காம் ஜார்ஜ் அழைப்பு விடுத்தார். இத்தகைய பழம் பெருமை வயநாட்டுக்கு உள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Wayanad ,The Land That Runs Wellesley , Weerama, Wayanad, Wellesley, Ota, Earth
× RELATED உங்களை ஒரு வாக்காளர் போல நான்...