×

என் மகனோட சட்டைய கிழிச்சி கேள்வி கேளுங்க! கமல்நாத் தடாலடி

மத்தியப் பிரதேச மாநில முதல்வர் கமல்நாத். இவருடைய மகன் நகுல். இம்முறை சிந்த்வாரா மக்களவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக முதல் முறையாக அரசியல் களத்தில் அடியெடுத்து வைக்கிறார். இங்கு வரும் 29ம் தேதி தேர்தல் நடக்கிறது.அதே நேரத்தில், சிந்த்வாரா சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் கமல்நாத் போட்டியிடுகிறார்.

சிந்த்வாரா மக்களவை தொகுதியில் 9 முறை வெற்றி பெற்று எம்பி.யாக சாதனை படைத்தவர் கமல்நாத். தற்போது, பலமிக்க தனது தொகுதியை மகனுக்காக தாரை வார்த்துள்ளார். மகனை ஆதரித்து சிந்த்வாரா தொகுதிக்கு உட்பட்ட தனோரா கிராமத்தில் நடந்த பிரசாரத்தில் பேசிய கமல்நாத், அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். அது இதோ: இங்க பாருங்க... இன்று இங்கு நகுல் இல்லாமல் இருக்கலாம்.

ஆனால், உங்களுக்கு சேவையாற்ற அவர் வருவார். அதற்கான பொறுப்பை நான் அவரிடம் கொடுத்துள்ளேன். ஒருவேளை, அவர் தொகுதிக்காக உழைக்கத் தவறினால், சொன்னதை செய்யாமல் போனால், நகுலின் சட்டையை கிழித்து நிக்க வைச்சு கேள்வி கேளுங்கள். அந்த வேலையை உங்களுக்கு தருகிறேன். கடந்த தேர்தலில் பிரதமர் மோடி கலர் கலராக பொய்களை அள்ளி வீசினார். சாமானியர்களுக்கு நல்ல நாள் வரும் என்று கூறினார். ஆனால், அவரோட நாட்கள் தான் விரைவில் முடிய போகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Kamalnath Trottaladi , My son, shirt, tear, question, ask! Kamalnath, Dagalladi
× RELATED இந்திய மக்களுக்கு இந்த தேர்தல் வாழ்வா?...