×

ரியல் சோசிடாடை வீழ்த்தியது பார்சிலோனா

ஸ்பெயினில் நடந்து வரும் லா லிகா கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரில், பார்சிலோனா அணி 2-1 என்ற கோல் கணக்கில் ரியல் சோசிடாட் அணியை போராடி வென்றது. அந்த அணி சார்பில் லெங்லெட் 45வது நிமிடத்திலும், ஜோர்டி ஆல்பா 64வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். ரியல் சோசிடாட் வீரர் ஜுவன்மி 62வது நிமிடத்தில் கோல் போட்டார். மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில், பார்சிலோனா அணி 33 லீக் ஆட்டத்தில் 23 வெற்றி, 8 டிரா, 2 தோல்வியுடன் 77 புள்ளிகள் பெற்று தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. அத்லெடிகோ மாட்ரிட் (68), ரியல் மாட்ரிட் (61), செவில்லா (53) அணிகள் அடுத்த இடங்களில் உள்ளன. பார்சிலோனா அணி எஞ்சியுள்ள 5 லீக் ஆட்டங்களில் 2 வெற்றி பெற்றால் சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. ரியல் சோசிடாட் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அபாரமாக கோல் அடிக்கிறார் ஜோர்டி ஆல்பா.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Sosidad ,Barcelona , Barcelona
× RELATED பார்சிலோனாவில் இருந்து மெஸ்ஸி விலகுவது உறுதி