×

முக்கிய அம்சங்களுடன் தேசிய பாதுகாப்பு தொடர்பாக அறிக்கை வெளியிட்டது காங்.

புதுடெல்லி: மத்தியில் அடுத்து காங்கிரஸ் ஆட்சி அமைத்தால், அமல்படுத்தப்பட உள்ள தேசிய பாதுகாப்பு திட்டங்களை அக்கட்சி நேற்று அறிவித்தது. தேர்தலை முன்னிட்டு, லெப்டினன்ட் ஜெனரல் (ஓய்வு) டி.எஸ்.ஹூடா தலைமையில் ‘தேசிய பாதுகாப்பு’ தொடர்பான அறிக்கையை காங்கிரஸ் தயாரித்துள்ளது. அது நேற்று வெளியிடப்பட்டது. இது குறித்து ப.சிதம்பரம் நேற்று அளித்த பேட்டியில், ‘‘நாட்டின் முதல் முக்கிய பிரச்னை வேலைவாய்ப்பின்மை.

2வது விவசாய பிரச்னை. மூன்றாவது விஷயம் பெண்கள், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் உட்பட பலதரப்பட்ட மக்களின் பாதுகாப்பு. தேசிய பாதுகாப்பை எப்படி அணுக வேண்டும் என இந்த அறிக்கையில் விரிவாக கூறப்பட்டுள்ளது. ஹூடா அறிக்கையில் உள்ள பல கருத்துக்கள், நாங்கள் ஆட்சி அமைக்கும்போது அமல்படுத்தப்படும். நாட்டின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்,’’ என்றார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : national security, congress
× RELATED அதிமுக – பாஜக கூட்டணி முறிவுக்கு...