×

பாக். விமானத்தை சுட்டு வீழ்த்திய அபிநந்தன் விரைவில் பணியில் சேருகிறார்: பெங்களூரில் பயிற்சி முடிந்தது

பெங்களூரு: விமானப்படை விமானி அபிநந்தன் வர்தமான் விரைவில் பணியில் சேருகிறார். இந்திய  விமானப்படை விங்க் கமாண்டர் அபிநந்தன், பாக். எல்லையில் நுழைந்து அந்நாட்டின் விமானத்தை சுட்டு வீழ்த்தினார்.  இதைத்தொடர்ந்து நடந்த தாக்குதலில் அபிநந்தனின் விமானம் கீழே விழுந்தது. பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில்  தரையிறங்கிய அபிநந்தனை அந்நாட்டு ராணுவம் கைது செய்தது. இந்தியாவின்  கோரிக்கையை ஏற்று பாக். ராணுவம் அவரை விடுதலை செய்தது. இதைத்தொடர்ந்து  அபிநந்தனுக்கு பல்வேறு பரிசோதனைகள் நடந்தன. தற்போது, எச்ஏஎல் நிறுவனத்திலுள்ள  ஏரோஸ்பேஸில் அபிநந்தன் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

12 வாரம்  பரிசோதனைக்கு பிறகு அதிகாரிகள் இறுதி முடிவு எடுப்பார்கள்.  இது தொடர்பாக அதிகாரி ஒருவர் கூறுகையில், “போர் விமானத்தை  இயக்கும் உடல் திறன் அபிநந்தனுக்கு இருக்கிறது என டாக்டர்கள் சான்றிதழ்  அளித்துள்ளனர். மே மாதத்திற்குள் அபிநந்தன், போர் விமானத்தை இயக்கும்  வாய்ப்பை பெறுவார்.  அவர்,அபிநந்தன் விமானப்படையின் எந்த பிரிவில் சேர்க்கப்படுவார்  என்பதை இப்போது கூற இயலாது” என்றார். நகரில் பணியாற்றிய அபிநந்தன், மேற்கு பிரிவுக்கு மாற்றப்பட்டதாக நேற்று முன்தினம்  கூறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Pak ,Bangalore , Abhinanthan, Bangalore
× RELATED பெங்களூரு விமான நிலையத்தில்...