×

விமான கட்டணங்கள் 15 சதவீதம் வரை உயர்வு

புதுடெல்லி: ஜெட் ஏர்வேஸ் விமானங்கள் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, விமான கட்டணங்கள் 10 முதல் 15 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
கடனில் மூழ்கிய ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், தனது சேவையை முழுவதுமாக நிறுத்தி விட்டது. இதனால் பல ஆயிரம் ஊழியர்கள் வேலையிழந்து தவிக்கின்றனர். இதனால் பிற நிறுவனங்கள் ஊழியர்களுக்கு வேலை வழங்கி வருகின்றன.   இதற்கிடையில், ஜெட் ஏர்வேஸ் சேவை முழுவதுமாக நிறுத்தியுள்ளதால், விமான கட்டணங்கள் அதிகரித்து வருகின்றன.

குறிப்பாக டெல்லி- டேராடூன் போன்ற குறைந்த தொலைவு நகரங்களுக்கு இடையே இயக்கப்படும் விமானங்களில் டிக்கெட் கட்டணம் சராசரியாக 10 முதல் 15 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. சிறு நகரங்களுக்கு செல்ல வார இறுதிகளில் கட்டணம் மேலும் அதிகம் என ஏர் இந்தியா அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கோடை விடுமுறை என்பதால் பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு பிற விமான நிறுவனங்கள் கூடுதல் விமானங்களை இயக்க தொடங்கியுள்ளன. விமான சேவை எண்ணிக்கை மேலும் அதிகரித்தால் கட்டணங்கள் பழைய நிலைக்கு வர வாய்ப்புகள் உள்ளன என விமான நிறுவன அதிகாரிகள் கூறுகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Flight, fees, 15 percent, rise
× RELATED அதிரடியாக உயர்ந்து வந்த நிலையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 குறைவு