×

பெண்களை விமர்சித்த விவகாரம்: ஹர்திக், ராகுலுக்கு அபராதம்

மும்பை: தனியார் டிவி நிகழ்ச்சியில் பெண்கள் குறித்து தரக்குறைவாக விமர்சித்ததாக சர்ச்சையில் சிக்கிய கிரிக்கெட் நட்சத்திரங்கள் லோகேஷ் ராகுல், ஹர்திக் பாண்டியாவுக்கு தலா 20 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.  இத்தொகையை பணியின்போது உயிரியந்த வீரர்களின் மனைவிகளுக்கும், பார்வையற்றவர்களுக்கான கிரிக்கெட் மேம்பாட்டுக்கும் நிதியாக வழங்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.கடந்த ஜன. 6ம் தேதி தனியார்  தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஹர்திக், கே.எல்.ராகுல் இருவரும், பெண்கள் குறித்து தரக்குறைவாகப் பேசியதாக சர்ச்சை எழுந்தது. இது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு இருவருக்கும் பிசிசிஐ நோட்டீஸ்  அனுப்பியது.  இருவரும் கிரிக்கெட் வாரியத்துக்கு விளக்கம் அனுப்பியதுடன் மன்னிப்பும் கேட்டனர்.

எனினும், ஆஸ்திரேலியாவில் இருந்த இருவரும் தொடரில் இருந்து விலகி உடனடியாக நாடு திரும்ப உத்தரவிடப்பட்டது. இவர்களுக்கு பதிலாக  மயாங்க் அகர்வால், விஜய் ஷங்கர் சேர்க்கப்பட்டனர். நியூசிலாந்துக்கு எதிரான  கடைசி 3 ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் கேப்டன் கோஹ்லிக்கு ஓய்வளிக்கப்பட்டதால், மாற்று வீரர்கள் தேவைப்பட்ட நிலையில் ஹர்திக், ராகுல் மீதான தடையை விலக்கிக் கொள்வதாக  பிசிசிஐ அறிவித்தது. அதன்  பிறகு இந்திய அணியில் இடம் பெற்ற இருவரும், உலக கோப்பைக்கான அணியிலும் இடம் பிடித்துள்ளனர்.

இந்நிலையில், இந்த பிரச்னை குறித்து விசாரணை நடத்திய பிசிசிஐ குறைதீர்ப்பாளர் டி.கே.ஜெயின், சம்பந்தப்பட்ட இருவருக்கும் தலா 20 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளார். இதில் 20 லட்ச ரூபாயை  பணியின்போது  இறந்த 10 துணை பாதுகாப்பு படை வீரர்களின் மனைவிகளுக்கு வழங்க வேண்டும். மீதி 20 லட்சத்தை  பார்வையற்றோர் கிரிக்கெட் வளர்ச்சிக்காக  4 வாரங்களுக்குள் அப்படி செய்யாவிட்டால் அவர்களின் ஊதியத்தில் இருந்து  பிசிசிஐ பிடித்தம் செய்து தர வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். மேலும், கிரிக்கெட் வீரர்கள் மற்றவர்களுக்கு முன் உதாரணமாக திகழ வேண்டும். அவர்களுக்கு கிடைத்துள்ள அந்தஸ்துக்கு ஏற்றவாறு நடந்துகொள்ள வேண்டும்  என்றும் ஜெயின் குறிப்பிட்டுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Hariky ,Rahul , Harrdik, Rahul, fine
× RELATED சொல்லிட்டாங்க…