×

அமெரிக்க தேர்தலில் ரஷ்யா தலையீடு முல்லரின் முழு அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்: நாடாளுமன்ற குழு சம்மன்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருந்தது தொடர்பாக நடத்திய ராபர்ட் முல்லர் தனது முழு அறிக்கையையும் தாக்கல் செய்ய அமெரிக்க நாடாளுமன்றத்தின் நீதித்துறை குழு சம்மன்  பிறப்பித்துள்ளது. கடந்த 2016ம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில், டிரம்புக்கு ஆதரவாக ரஷ்யா செயல்பட்டதாக புகார் எழுந்தது. இது குறித்து விசாரிக்க அமெரிக்காவின் பிரபல வக்கீலும், எப்பிஐ முன்னாள்  இயக்குனருமான ராபர்ட் முல்லர் நியமிக்கப்பட்டார். 2 ஆண்டுகளுக்கு மேலாக நடந்த விசாரணை அறிக்கையின் சுருக்கம் சமீபத்தில் வெளியானது.  இதில், ‘அமெரிக்க அதிபர் தேர்தலில் தலையிட ரஷ்ய அரசு முயற்சித்தது.  ஆனால், இதற்கு டிரம்ப் பிரசார குழுவினர் முழு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை’ என கூறப்பட்டது. ஆனால், அதிபர் டிரம்ப் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டதாக முல்லர் அறிவிக்கவில்லை.

இந்த அறிக்கை அதிபர் டிரம்ப்புக்கு நிம்மதியை அளித்தாலும், முல்லரின் முழு அறிக்கையை ஆராய்ந்து, டிரம்ப்புக்கு சிக்கலை ஏற்படுத்த எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி எம்பி.க்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.  இந்நிலையில்  ,முல்லரின் முழு விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என அமெரிக்க நாடாளுமன்றத்தின் நீதித்துறை குழுவின் தலைவர் நேற்று சம்மன் பிறப்பித்துள்ளார். இந்நிலையில், ‘டிரம்ப் மீதான பதவி நீக்க  கோரிக்கையை மக்கள் ஆதரவில்லாமல் பரிசீலிக்க முடியாது’ என சபாநாயகர் நான்சி பெலோசி மறுத்து விட்டார். அதே ேநரம்,  ‘டிரம்ப் மீது பதவி நீக்க தீர்மான நடவடிக்கை கொண்டு வர வேண்டும்’ என செனட்  உறுப்பினர்கள் எலிசபத் வாரென் கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Russia ,intervention ,Muller ,election ,US , US election, Russia, parliamentary committee
× RELATED ரஷ்ய மின்நிலையங்கள் மீது உக்ரைன்...