×

அரவக்குறிச்சி, சூலூர் இடைத்தேர்தல் நடத்தும் அலுவலர்களை அறிவித்தது தேர்தல் ஆணையம்

சென்னை: அரவக்குறிச்சி தொகுதி இடைத்தேர்தல் நடத்தும் அலுவலராக மீனாட்சி என்பவரும், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களாக ஈஸ்வரன், அமுதா ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதேபோன்று  சூலூர் தொகுதி இடைத்தேர்தல் நடத்தும் அலுவலராக பாலகிருஷ்ணன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலராக ஜெயராஜ், மீனாகுமாரி நியமனம்  செய்யப்பட்டுள்ளனர். வேட்புமனுக்கள் அரவக்குறிச்சி மற்றும் சூலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வரும் 22-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை பெற்றுக்கொள்ளப்படும் என்றும்  தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Aravallakuri ,Election Commission ,seat election officials , Aravakurichi, Sulur, the by-election, the Election Commission
× RELATED ஜாதி, மதம், மொழி ரீதியாக வாக்குகள்...