×

முடிந்தது ஜனநாயக கடமை கொடைக்கானலில் குவிந்த சுற்றுலாப்பயணிகள்

* போக்குவரத்து நெரிசலால் அவதி

கொடைக்கானல் :  தேர்தல் முடிவடைந்ததையடுத்து கொடைக்கானலில் சுற்றுலாப்பயணிகள் அதிகளவில் குவிந்து வருகின்றனர். பள்ளிகளில் கோடை விடுமுறை விட்ட பின்பும் தேர்தலால் கொடைக்கானலில் சுற்றுலாப்பயணிகள் வரத்து குறைவாகவே இருந்தது. தற்போது தேர்தல் முடிந்ததையடுத்து நேற்று காலையிலிருந்தே சுற்றுலாப்பயணிகள் கொடைக்கானலை நோக்கி படையெடுக்க துவங்கி விட்டனர். மோயர் பாயிண்ட், குணா குகை, பில்லர் ராக், கோக்கர்ஸ் வாக், தற்கொலை முனை, பைன் பாரஸ்ட் போன்ற தலங்களில் சுற்றுலாப்பயணிகளின் தலைகளாகவே தென்பட்டன. தவிர ஏரியில் படகுசவாரி, ஏரிச்சாலையில் குதிரை சவாரி, சைக்கிள் மற்றும் டூவீலர் ரைடிங் செய்து வருகின்றனர்.

ஒரு மாதமாக கொடைக்கானலில் வெயில் கொளுத்தி வந்த நிலையில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் கொடைக்கானல் முழுவதும் கோடைசீசனை வரவேற்கும் விதமாக குளுமையாக காணப்படுவதால் சுற்றுலாப்பயணிகள் உற்சாகமடைந்து வருகின்றனர். நேற்று ஒரே நாளில் கொடைக்கானல் நோக்கி சுற்றுலா வாகனங்கள் படையெடுப்பால், பல இடங்களில் நெரிசல் ஏற்பட்டு போக்குவரத்து ஸ்தம்பித்தது. இதனால் சுற்றுலாப்பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

கொடைக்கானல் அப்சர்வேட்டரி பகுதியில் மரக்கிளை ஒன்று சாலையில் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து தடைபட்டது. பின்னர் தீயணைப்புத்துறையினர் மரக்கிளையை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர்படுத்தினர். வரும் காலங்களில் சுற்றுலாப்பயணிகள் வருகை மேலும் அதிகரிக்கும். எனவே மாவட்ட எஸ்பி, கொடைக்கானலில் போக்குவரத்தை சீர்செய்ய கூடுதல் போலீசாரை பணியமர்த்த வேண்டும் என சுற்றுலாப்பயணிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Kodaikanal,long weekend,Tourist people,Voting
× RELATED கடற்கரை – தாம்பரம் இடையே 15 ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு