×

4 தொகுதிக்கான இடைத்தேர்தலில் போட்டியிட விருப்ப மனுக்கள் நாளை வினியோகம்: ஓபிஎஸ், இபிஎஸ் அறிவிப்பு

சென்னை: “அதிமுக சார்பில் 4 தொகுதிக்கான இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புகிறவர்களிடம் இருந்து நாளை விருப்ப மனுக்கள் பெறப்படும்” என்று ஓபிஎஸ்., இபிஎஸ் அறிவித்துள்ளனர். தமிழகத்தில் காலியாக உள்ள சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மே 19ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் 22ம் தேதி தொடங்குகிறது. 29ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள். ஏப்ரல் 30ம் தேதி மனுக்கள் பரிசீலனை நடைபெறுகிறது. மே 2ம் தேதி மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள் ஆகும். வாக்கு எண்ணிக்கை மே 23ம் தேதி நடக்கிறது.

இத்தேர்தலில் திமுக சார்பில் சூலூர் தொகுதியில் பொங்கலூர் பழனிச்சாமி, அரவக்குறிச்சியில் செந்தில் பாலாஜி, திருப்பரங்குன்றத்தில் டாக்டர் பி.சரவணன், ஓட்டப்பிடாரத்தில் எம்.சி.சண்முகையா ஆகியோர் போட்டியிடுகின்றனர். வேட்புமனு தாக்கல் தொடங்க இன்னும் 4 நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ளது. இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் முதல்வர் எடப்பாடி வெளியிட்ட அறிவிப்பு: சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் ஆகிய தொகுதிக்கான இடைத்தேர்தல் மே 19ம் தேதி நடக்கிறது. இத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புகின்றவர்கள் தலைமை கழகத்தில் 21ம் தேதி(நாளை) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்ப கட்டண தொகையாக ரூ.25,000 செலுத்தி படிவங்களை பூர்த்தி செய்து அன்றைய தினமே வழங்க வேண்டும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : constituencies ,announcement ,OBS , 4 constituency, by-election, competition, favorite petition
× RELATED சென்னை மாவட்டத்தில் 16 சட்டமன்ற...