நாட்டை இந்து தேசமாக மாற்ற முயற்சிக்கிறது பாஜ: யெச்சூரி குற்றச்சாட்டு

கொல்கத்தா: ‘‘இந்தியாவை இந்து தேசமாக மாற்ற பாஜ முயற்சிக்கிறது’’ என சீதாராம் யெச்சூரி  கூறியுள்ளார்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் சீதாராம் யெச்சூரி, கொல்கத்தாவில் நேற்று செய்தியாளருக்கு அளித்த பேட்டி: கடந்த 1978ல் ராகுலின் பாட்டி இந்திரா காந்தி கர்நாடகாவின் சிக்மகளூர் தொகுதியிலும், ராகுலின் தாய் கடந்த 1999ம் ஆண்டில் கர்நாடாகாவின் பெல்லாரி தொகுதியிலும்  போட்டியிட்டனர். அவர்கள் பாஜ.வை எதிர்த்துதான் அந்த தேர்தல்களில் போட்டியிட்டனர். கடந்த 2004ம் ஆண்டு தேர்தலில் மார்க்சிஸ்டை் தலைமையிலான இடதுசாரிகள்  காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்தது.

இந்த நிலையில், இப்போது கேரளாவின் வயநாட்டில் இடதுசாரி வேட்பாளரை எதிர்த்து காங்கிரஸ் போட்டியிடுவது ஏன்? பாஜ.வை எதிர்த்து போட்டியிடுவது என்பது ஒரே ஒரு  தகவலை மட்டும் தருகிறது. மாறாக இடதுசாரி கட்சியை எதிர்த்து காங்கிரஸ் போட்டியிடுவது பல்வேறு தகவல்களை தருவதாக உள்ளது. கேரளாவில் நாங்கள் அரசியல் ரீதியாக  தொடர்ந்து காங்கிரசை எதிர்த்து போட்டியிடுகிறோம். இதனால், இந்த மாநிலத்தில் காங்கிரசுக்கு எதிரான போராட்டம் தொடரும். ஆர்எஸ்எஸ்.சின் ஒரு பகுதியாக கருதப்படும் பாஜ  இந்தியாவை இந்து தேசமாக மாற்ற முயற்சி மேற்கொள்கிறது. முக்கிய அமைப்புகள் அனைத்தையும் பாஜ அரசு சிதைத்து வருகிறது. எனவே, இதுபோன்ற நிகழ்வுகளை இனியும்  நாம் அனுமதிக்கக் கூடாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories:

>