×

தொடர் பணி காரணமாக வாக்கு எண்ணும் மையத்தில் பெண் டிஆர்ஓ திடீர் மயக்கம்: தஞ்சையில் பரபரப்பு

தஞ்சை:  தஞ்சை மக்களவை மற்றும் தஞ்சை சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நேற்று முன்தினம் நிறைவு பெற்றது. இதையொட்டி வாக்காளர்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், தஞ்சை குந்தவை நாச்சியார் அரசினர் பெண்கள் கல்லூரியில் மக்களவைக்கும், சட்டமன்றத்துக்கும் தனித்தனி அறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இங்கு, வருவாய் துறையினர், போலீசார் என்று பல்வேறு துறையை சேர்ந்த அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை டிஆர்ஓ ஜனனி சவுந்தர்யா பணியில் ஈடுபட்டிருந்தார். அவர் தரைதளத்தில் இருந்து முதல் தளத்தில் உள்ள ஒரு அறைக்கு நடந்து சென்றார். அப்போது திடீரென மயங்கினார்.

உடனே அங்கு பணியில் இருந்த மற்ற அதிகாரிகள், டிஆர்ஓவை தூக்கி அமர வைத்து முகத்தில் தண்ணீர் தெளித்தனர். சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்து டிஆர்ஓ ஜனனி சவுந்தர்யா எழுந்தார். பின்னர் அங்கு தயார் நிலையில் இருந்த டாக்டர்கள், டிஆர்ஓ ஜனனி சவுந்தர்யாவுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து பணியில் ஈடுபட்டதால் அவருக்கு மயக்கம் ஏற்பட்டதாக தெரிவித்தனர். தகவலறிந்து மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியும், கலெக்டருமான அண்ணாதுரை, தஞ்சை மக்களவை தொகுதி தேர்தல் பார்வையாளர் ஜெகதீஸ்வரர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து டிஆர்ஓ ஜனனி சவுந்தர்யாவை சந்தித்து ஆறுதல் கூறினர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : vote count center , Continuous work, vote count, center, female trauma, faint
× RELATED வாக்கு எண்ணும் மையத்தில்...