×

ஆப்கான் - தலிபான் பேச்சு காலவரையின்றி ஒத்திவைப்பு

தோகா: தலிபானுடன் இந்த வார இறுதியில் நடக்க இருந்த அமைதிப் பேச்சுவார்த்தை காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது அமைதி பேச்சுவார்த்தைக்கு  பெரும் முட்டுக்கட்டையாக அமைந்துள்ளது. ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அங்கு அமைதியை ஏற்படுத்த அமெரிக்கா முன்வந்தது. கத்தார் தலைநகர் தோகாவில் இந்த வார  இறுதியில் இதற்கான பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் இந்த ஏற்பாடு தோல்வியை தழுவி விட்டது. பேச்சுவார்த்தை காலவரையறை  இன்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆப்கனில் பாதிக்கும் மேற்பட்ட பகுதிகளை தலிபான்கள் தங்கள் ஆதிக்கத்தில் கொண்டு வந்துள்ளனர். ஐநா புள்ளி விவரப்படி அங்கு 3,804 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதை  முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ள அமெரிக்கா, இருதரப்பையும் அமைதி பேச்சுவார்த்தையில் பங்கேற்க தொடர்ந்து அழைப்பு விடுத்து வருகிறது. இதில்  பங்கேற்பவர்கள் பட்டியலை, ஆப்கன் அதிபர் அஷ்ரப் கனி தலைமையிலான நிர்வாகம் அறிவித்தது. இதில் 250 பேர் பங்கேற்பதாக இருந்தது. இதற்கு தலிபான்கள்  ஒப்புக்கொள்ளவில்லை.

 ‘அமைதிக்கான பேச்சுவார்த்தை நடத்துவதற்குதான் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், திருமண விழாவுக்கு அழைப்பிதழ் கொடுப்பது போலவும், ஓட்டலில்  பார்ட்டியில் பங்கேற்க அழைப்பு விடுப்பது போலவும் நீண்ட பட்டியலை கொடுத்துள்ளனர். இத்தனை பேருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு நாங்கள் விரும்பவில்லை. அஷ்ரப்  கனியின் நிர்வாகத்தில் உள்ள குறிப்பிட்ட சிலருடன் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்’ என தலிபான்கள் கூறியுள்ளனர்.இதுகுறித்து பேச்சு வார்த்தை ஏற்பாட்டு குழுவிற்கு தலைமை வகிக்கும் சுல்தான் பரகத் விடுத்துள்ள அறிக்கையில், ‘கூட்டத்தில் யார் பங்கேற்க வேண்டும் என்பதில் ஒருமித்த  கருத்து ஏற்படுவது அவசியம்’ என குறிப்பிட்டுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Afghan ,talks ,Taliban , Afghan ,Taliban,talks ,indefinitely, postponed
× RELATED ஆப்கானிஸ்தானில் 13 வயதிற்கு மேல் பெண்கள் பள்ளிகளுக்கு செல்ல தடை