×

குஜராத்தில் விபரீதம் தேர்தல் பிரசார கூட்டத்தில் ஹர்திக் படேலுக்கு ‘பளார்’:தாக்குதல் நடத்தியவருக்கு தர்ம அடி

அகமதாபாத்: குஜராத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த காங்கிரஸ் பிரமுகர் ஹர்திக் படேலை மேடையில் ஏறிய மர்ம நபர் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.  குஜராத் மாநிலத்தில் படிதார் இனமக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு கோரி கடந்த 2015ம் ஆண்டு முதல் போராட்டம் நடத்தி வந்தவர் ஹர்திக் படேல். இவர் சமீபத்தில் தன்னை காங்கிரஸ் கட்சியில் இணைத்துக்கொண்டதை அடுத்து, அவர் கட்சியின் முக்கிய பேச்சாளராக நியமனம் செய்யப்பட்டு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். குஜராத் மாநிலம், சுரேந்திரநகர் மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சோமா படேலை ஆதரித்து, பல்டானா கிராமத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில ஹர்திக் நேற்று பேசினார்.

அப்போது திடீரென மேடை மீது ஏறிய மர்ம நபர் ஒருவர், ஹர்திக் படேலின் கன்னத்தில் பளார் என அறைந்தார். தொடர்ந்து அவரை திட்டியபடி இருந்தார். மேடையில் இருந்த காங்கிரஸ் பிரமுகர்கள் அந்த நபரை இழுத்து சென்று சரமாரியாக தாக்கி, உடையையும் கிழித்து எறிந்தனர். இதில் அந்த நபர் படுகாயம் அடைந்தார். அவர் பெயர் தருண் கஜ்ஜார். குஜராத்தில் உள்ள மேக்சானா மாவட்டம் காடி நகரத்தை சேர்ந்தவர். தனிப்பட்ட காரணத்துக்காக ஹர்திக்கை அவர் அறைந்ததும் தெரிய வந்தது. பின்னர் அவர் போலீசில் ஒப்படைக்கப்பட்டார். லிம்பிடி நகர மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை ஹர்திக் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த காட்சியை அந்த கூட்டத்தை படம் பிடித்த அனைத்து ஊடக கேமராக்களும் படம் பிடித்து வெளியிட்டுள்ளன.

கொலை சதி - ஹர்திக்மேடை நாடகம் - பாஜ

தாக்குதல் பற்றி ஹர்திக் படேல் கூறுகையில், `‘என் மீதான தாக்குதலுக்கு பாஜ.வே காரணம். இது, என்னை கொல்ல நடத்தப்பட்ட சதி’’ என குற்றம்சாட்டினார். ஆனால், ஆளும் பாஜ.வினர் இந்த தாக்குதலை, ‘தேர்தலுக்காக மக்களிடம் அனுதாபம் பெறுவதற்காக காங்கிரஸ் நடத்திய திட்டமிட்ட மேடை நாடகம்’ என குற்றம்சாட்டினர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Hazara ,election campaign meeting ,Haridih Patel ,Gujarat , Gujarat, disaster, election campaign Hardik Patel, 'Pallar': Attack
× RELATED 10 ஆண்டுகாலம் ஆட்சி செய்த பிரதமரால்...