கார் மீது பஸ் மோதி மாணவி பரிதாப பலி

சென்னை: திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பரித்வி நகரை சேர்ந்தவர் ரவி (45). முன்னாள் ராணுவ வீரர். இவரது மனைவி தேவி. இவர்களது மகள் ரேஷ்மா சாய்  (15). சமீபத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியுள்ளார். நேற்று முன்தினம் ரவி குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பூபதி, ரமாதேவி ஆகியோர் காரில் வானகரம் புறப்பட்டனர். மதுரவாயல் மேம்பாலம் மீது வானகரம் அருகே காரை பின்னால் எடுக்க டிரைவர் முயன்றபோது  கள்ளக்குறிச்சியில் இருந்து கோயம்பேடு நோக்கி வந்த அரசு பஸ் கார் மீது  மோதியது. இதில் காரில் பயணம் செய்தவர்களுக்கு காயம் ஏற்பட்டது. தகவலறிந்து வந்த கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு  சிகிச்சை பலனின்றி ரேஷ்மா சாய் இறந்தார். அவரது உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தேவி, ரமாதேவி, பூபதி ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. இந்த விபத்திற்கு காரணமான பஸ்  டிரைவர் ஜேம்ஸ் (44) என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : car crash , A bus ,crashed , a car, crash
× RELATED கோவை மாவட்டத்தில் பேருந்து அட்டைக்கு...